வெடுக்குநாறிமலை ஆலயத்திற்கு ஏணிப் படி அமைக்க பொலிஸார் தடை விதிப்பு!

வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு ஏணிப் படி அமைக்கும் பணிக்கு நெடுங்கேணி பொலிஸார் தடை விதித்துள்ளனர். நீண்டகாலமாக படிகள் இல்லாமல் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் பக்தர்கள் வெடுக்குநாறிமலை உச்சிமலைக்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். பக்தர்களின் நன்மை கருதி ஆலய நிர்வாகத்தினரால் பண்பாட்டு அலுவல்கள் அமைச்சு படி அமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட நிதியின் ஊடாக படி அமைக்கும் வேலையை ஆரம்பித்தனர்.

தற்போது அது முடியும் தறுவாயில் இருக்கும் நிலையில் குறித்த ஏணிப் படிகளை அமைக்கும் கடை உரிமையாளரை நெடுங்கேணி பொலிஸார் அழைத்து ஏணிப்படிகளை அமைக்க வேண்டாம் எனவும் அவ்வாறு தொடர்ந்து வேலையில் தொடர்ந்தால் கைது செய்வோம் என எச்சரித்து ஏணிப் படி அமைக்கும் பணியை நிறுத்தியுள்ளனர். அதன்பின்னர் நிர்வாகத்திடமும் நெடுங்கேணி பொலிஸார் குறித்த வேலையை செய்ய வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளனர். இவர்களின் எச்சரிக்கையால் ஏணிப் படி அமைக்கும் வேலை நிறுத்தப்பட்டுள்ளது. இவர்களின் இத்தகைய செயற்பாடுகளினால் பண்பாட்டு அலுவல்கள் அமைச்சினால் ஒதுக்கப்பட்ட நிதி திரும்பி போக உள்ளதாகவும் ஆலய நிர்வாக குழு உறுப்பினர் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!