சவுதி பத்திரிகையாளர் தான் கொல்லப்படுவதை தானே பதிவு செய்தாரா?

துருக்கிக்கான சவுதிஅரேபிய தூதரகத்தில் கொல்லப்பட்டதாக கருதப்படும் சவுதி அரேபிய பத்திரிகையாளர் தனது மரணத்தை தானே பதிவு செய்துள்ளார் என துருக்கி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஒக்டோபர் இரண்டாம் திகதி தூதரகத்திற்குள் நுழைவதற்கு முன்னர் ஜமால் கசோகி தனது கையிலிருந்த அப்பிள்கைக்கடிகாரத்தை இயங்கச்செய்தார் என துருக்கியின் சபா செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக அவர் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்படும் தருணங்கள் பதிவு செய்யப்பட்டு அவருடைய தொலைபேசிக்கும் ஐகிளவுட்டிற்கும் சென்றுள்ளன என சபா தெரிவித்துள்ளது.

படுகொலையில் ஈடுபட்ட நபர்களின் உரையாடல்கள் பதிவாகியுள்ளன என சபா தெரிவித்துள்ளது.

ஜமால்கசோகி தனது பெண் நண்பியிடம் கொடுத்துவிட்டு சென்ற கையடக்க தொலைபேசியில் படுகொலை இடம்பெற்ற தருணங்கள் பதிவாகியுள்ளதை விசாரணையாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதேவேளை பத்திரிiகாயளரை கொலை செய்தவர்கள் அந்த கைக்கடிகாரத்தை கண்டுபிடித்து மிகவும் சிரமப்பட்டு சில விடயங்களை அழித்துள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜமால் கசோகி துருக்கியில் உள்ள தூதரகத்திற்குள் கொல்லப்பட்டமைக்கான வீடியோ மற்றும் ஒலிநாடா ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!