மைக்ரோசொப்டின் முக்கிய தூண் சரிந்தது.

தொழில்நுட்ப வல்லுனரும் மைக்ரோசொப்டின் இணை நிறுவனரும் வோல்கனின் நிறுவனருமான போல் அலன் புற்று நோயின் கோரப்பிடியில் சிக்கி தனது 65ஆவது வயதில் நேற்று காலமானார்.

அமெரிக்காவின் சியாட்டலில் பிறந்த போல் அலன் பள்ளி பருவத்திலேயே கணினித்துறையில் சிறந்த ஆர்வமுடையவராக திகழ்ந்தார்.

போல் அலன் தனது 14ஆவது வயதில் லேக்சைட் பள்ளியில் கல்வி கற்கும் போது தன்னைப் போலவே கணினியில் அடங்கா ஆர்வமும் திறமையையும் கொண்ட பில்கேட்ஸை சந்தித்தார்.

போல் அலனும் பில்கேட்சும் கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு கணினிக்கு மென்பொருள் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கினர்.

இவர்களின் முயற்சியின் விளைவாக 1975ஆம் ஆண்டு மைக்ரோசொப்ட் நிறுவனம் உறுவாகியது.

1981இல் MS-DOS போலவே Q-DOS என்ற மென்பொருளைக் கண்டறிந்து, ஐபிஎம் நிறுவனத்தின் பி.சி. ஆபரேட்டிங் சிஸ்டத்தை நிறுவியதைத் தொடர்ந்து கணினி சந்தையில் மைக்ரோசொப்ட் நிறுவனம் கொடி கட்டி பறக்கத் தொடங்கியது.

1983ஆம் ஆண்டு வரை கணினி சந்தையில் கொடி கட்டி பறக்கத் தொடங்கிய மைக்ரோசொப்டின் தலைமை தொழிநுட்ப வல்லுநராக போல் அலன் இருந்தார்.

போல் அலன் மைக்ரோசொப்டின் “ஐடியா மேன்” “மேன் ஒப் அக்ஷன்” என அழைக்கப்பட்டார்.

தனது இளம் வயது முழுமையடைவதற்குள் கோடீஸ்வரனாகிய போல் அலன் புற்று நோய் தாக்கத்தால் தனது 30ஆவது வயதில் நிறுவனத்தை விட்டு விலகினார்.

தன்னம்பிக்கையோடு அலன் சிகிச்சை பெற்று புற்று நோயை வெற்றி கொண்டு Vulcan Capital என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார்.

மீண்டும் புற்று நோய் தாக்கியதால் அலுவலக ரீதியிலான வாழ்க்கையிலிருந்து ஓய்வெடுத்தார்.

தான் சம்பாதித்த பணத்தை கொண்டு உலகம் முழுவதும் நற்பணிகளைச் செய்து வந்தார்.

இந் நிலையிலேயே போல் அலன் நேற்று உயிரழந்துள்ளார்.

ஆலனின் மறைவு குறித்து மைக்ரோசொப்டின் தலைமை நிர்வாக அதிகாரி சத்ய நாதெல்லா,

“மைக்ரோசொப்ட் நிறுவனத்திற்கும் தொழில் துறைக்கும் அவரின் பங்களிப்பு அளப்பரியது.

தொடர்ந்து அமைதியாக பணிபுரிந்தாலும் தொழிநுட்பத்தில் பல உயரங்களை அவர் தொட்டுள்ளார்.

அவரது புதியதைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம், தனது எல்லைகளை விரிவாக்கும் திறன் ஆகியவற்றைக் கண்டு நான் வியந்திருக்கிறேன்.

என்னைப் போலவே மைக்ரோசொப்டில் இருக்கும் அனைவரையும் தன் வசம் ஈர்த்திருந்தார்.

அவரது ஆன்மா இறைவனின் காலடியில் உறங்கட்டு

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!