செல்பியால் வந்த வினை: – கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஏரியில் மூழ்கி பலி

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவ-மாணவிகள் 50-க்கும் மேற்பட்டோர் என்.எஸ்.எஸ். முகாமிற்காக பெங்களூரு புறநகர் பகுதியான நெலமங்களாவுக்கு வந்தனர். நேற்று காலையில் நெலமங்களா தாலுகா தாபஸ்பேட்டை அருகே உள்ள தேவரஒசஹள்ளி கிராமத்தில் உள்ள ரேவண்ணா சித்தேஷ்வரா கோவிலுக்கு சென்று அவர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

அப்போது கோவில் அருகே உள்ள ஏரியின் கரையில் பூரண சந்திரா (வயது 17), ஷசாங்(17) மற்றும் முகமது மூர்தாஜ்(16) ஆகிய 3 பேரும் நின்று கொண்டு செல்போன் மூலம் ‘செல்பி’ புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது அவர்கள் 3 பேரும் ஏரிக்குள் தவறி விழுந்தனர். நீச்சல் தெரியாததால் ஏரி தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார்கள். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கல்லூரி விரிவுரையாளர் சிவண்ணா ஏரிக்குள் குதித்து மாணவர்களை காப்பாற்ற முயன்றார். அதற்குள் 3 மாணவர்களும் ஏரி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துவிட்டனர். பின்னர் அவர்களுடைய உடல்கள் மீட்கப்பட்டன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!