தமிழ் மக்கள் கூட்டணி என்ற மாற்று அணி – விக்னேஸ்வரன்அறிவிப்பு

தமிழ் மக்கள் கூட்டணி என்ற பெயரில் மாற்று அணியொன்றை அமைப்பதாக சிவி விக்னேஸ்வரன் சற்று முன்னர் அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் தமிழ் மக்கள் பேரவையின் மக்கள் சந்திப்பில் சிவி விக்னேஸ்வரன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்

தனது எதிர்கால அரசியல் தொடர்பான அறிவிப்பை இன்றைய தினம் இடம்பெறும் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் அறிவிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையிலேயே சற்று நேரத்திற்கு முன்னர் அதனை அறிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பே தாம் புதிய கட்சியொன்றை ஆரம்பிப்பதற்கான கட்டாயத்தை தள்ளிவிட்டதாகவும் இதன்போது அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!