இரத்தத்துடன் நீர் கலந்து விற்பனை செய்த கும்பல் சிக்கியது

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இரத்தத்துடள் குளுகோஸ் நீரை கலந்து கலப்பட தயார் செய்து ஆறு மாதங்களாக விற்பனை செய்து வந்த கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்திலையில் குறித்த இரத்தம் எச்.ஐ.வி சோதனை ஏதும் செய்யாமல் அவர்கள் ஆயிரம் பேருக்கு இரத்தத்தை விற்பனை செய்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்து.

உத்தரப் பிரதேசத்தில் ஒரு கும்பல் கடந்த ஆறு மாதங்களாக , அனுமதி இன்றி போலியாக இரத்த வங்கி ஒன்றை நடத்தி வந்துள்ளது. முகமது நசீம் என்பவர் ராகவேந்திர சிங் என்ற உதவியாளரின் துணையுடன் குறித்த இரத்த வங்கியை நடத்தி வந்துள்ளார்.

போதைக்கு அடிமையானவர்கள், பணம் தேவைப்படும் ஏழை மக்களை தொடர்பு கொண்டு அவர்களுக்கு 500 ரூபாய் பணம் கொடுத்து ஒரு யுனிட் இரத்தத்தை எடுத்து. அதனுடன் குளுகோஸ் நீரை சேர்த்து இரண்டு யுனிட்டாக மாற்றி. அதனை இரத்தம் தேவைப்படுபவர்களுக்கு யுனிட் ஒன்றுக்கு 2 ஆயிரம் முதல் 3 ரூபாய் வரை விற்பனை செய்துள்ளனர்.

எடுக்கப்பட்ட இரத்தத்தை, எச்.ஐ.வி உள்ளிட்ட எந்த சோதனையும் செய்யாமல் அதனை கலப்படம் செய்து அப்படியே விற்பனை செய்துள்ளனர். அரசு அங்கீகாரம், முத்திரை உள்ளிட்ட அனைத்தையும் போலியாக தயார் செய்து, அசல் இரத்த வங்கி உறையை போன்றே தயார் செய்து இரத்தம் விற்பனை செய்யும்போது பயன்படுத்தியுள்ளனர்.

இதனால் ஆறு மாதங்களாக யாருக்கும் சந்தேகம் வரவில்லை. எனினும் இவர்கள் விற்பனை செய்த இரத்தம் அதிக நீருடன் இருப்பதை கண்டுபிடித்த வைத்தியசாலை இது குறித்து விசாரித்தபோது இந்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. இதையடுத்து பொலிஸாரிடம் புகார் அளித்த நிலையில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து குறித்த நபர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!