தமிழர்களால் ஒரு புதிய குடியேற்றம் சாத்தியமா?

கடந்த 28 வரு­டங்­க­ளுக்கு மேலாக, வலி. வடக்­கில் இரா­ணு­வத்­தி­னர் வசப்­ப­டுத்­தி­யி­ருந்த பொது­மக்­க­ளின் 683ஏக்­கர் நிலப்­ப­ரப்பு, கடந்த வாரம் பொது­மக்­க­ளிடமே மீள­வும் கைய­ளிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. நிகழ்­வில் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்ட யாழ்ப்­பாண மாவட்டச் செய­லர் நா.வேத­நா­ய­கன் உரை­யாற்­றும்­போது ஒரு விட­யத்தை அழுத்­திக் கூறி­யி­ருந்­தார்.

‘‘காணி­கள் விடு­விக்­கப்­ப­டு­வது அல்ல முக்­கிய விட­யம். விடு­விக்­கப்­பட்ட காணி­க­ளில் காணி­யின் சொந்­தக்­கா­ரர்­கள் உட­ன­டி­யா­கக் குடி­யே­றி­னால்தான் ஏனைய காணி­க­ளை­யும் விடு­விக்க வாய்ப்­பாக அமை­யும்’’. இது அவர் மக்­களை வின­ய­மா­கக் கேட்­டுக்­கொண்­ட­தா­கக் கரு­திக்­கொள்­ள­வேண்­டும். அத்­து­டன் இந்த விட­யத்­தில் நாம் மிக­வும் மேம்­பட வேண்­டி­யு­மி­ருக்­கி­றது…! இந்த நிலை தமி­ழர்­களை எங்கு கொண்­டு­போய் விடும்…?

ஈழப்­போ­ராட்­டம் கார­ண­மாக நிலங்­க­ளைப் பறி­கொ­டுத்த நாம் அவற்றை மீட்­டெ­டுப்­ப­தற்­கான தொடர் போராட்­டங்­க­ளில் ஈடு­பட்டு வரு­கி­றோம். அவற்­றில் வெற்­றி­யும் கண்­டி­ருக்­கி­றோம். இன்­னும் நீள்கின்ற போராட்­டங்­க­ளும் இருக்­கின்­றன. எமக்­கு­ரிய காணி­களை, பரம்­பரை முது­சங்­களை உரி­மைப்­ப­டுத்­திக் கொள்­ளும் எமது போராட்­டங்­கள் வர­வேற்­கத்­தக்­கவை.

அதே­நே­ரம் எமது நிலம் சார்ந்த இறுக்­க­மும் பிணைப்­பும்­கூட அத்­தி­ய­வ­சி­ய­மா­னதே. வலி. வடக்­கில் ஏற்­க­னவே விடு­விக்­கப்­பட்ட தெல்­லிப்­ப­ழைப் பகு­தி­க­ளில் இன்­று­வ­ரை­கூட பலர் குடி­யே­றாத நிலை காணப்­ப­டு­கி­றது. சில இடங்­க­ளில் பற்றை மண்­டிக் கிடப்­ப­தை­யும் கவ­னிக்­க­லாம். இப்­ப­டி­யாக எமது காணி­யில் குடி­யே­றப் பின்­நிற்­கும் எம்­மால் புதி­தாக ஒரு குடி­யேற்­றத்தை ஏற்­ப­டுத்த முடி­யும்?

தற்­போது முல்­லைத்­தீவு மாவட்­டம் சிங்­க­ளக் குடி­யேற்­றங்­க­ளால் பறி­போய்க்­கொண்­டி­ருக்­கி­றது. வட­மா­காண சபை­யி­னர் கிளர்ந்­தெ­ழுந்து முல்­லைத்­தீ­வுக்கு எந்த வாக­னத்­தில் எப்­ப­டிச் செல்­வது? எவ்­வ­ளவு நேரம் அங்கு நின்று பார்­வை­யி­டு­வது? எனப் பல மணி­நே­ரம் ஆராய்­வார்­கள்! அந்த இடத்­துக்கு ஒரு தட­வை­போய் எட்­டிப்­பார்த்­து­விட்டு விரை­வில் திரும்­பி­விட வேண்­டும் என்­பதே அவர்­க­ளின் வேலை­யாக இருக்­கி­றது!

மாறா­கத் தமி­ழர்­க­ளுக்­கு­ரிய நிலங்­க­ளில் அவர்­கள், வாழ்­வ­தற்­கு­ரிய வசதி வாய்ப்­புக்­களை ஏற்­ப­டுத்தி, அதில் அவர்­க­ளைக் குடி­ய­மர்த்­து­ வது பற்­றிச் சிந்­திப்­ப­தான அறி­கு­றி­கள் தென்­ப­ட­வில்லை. அப்­ப­டி­யான செயற்­பா­டு­கள் நிகழ்­வது உண்­மை­யா­னால், சிங்­க­ள­வர்­கள் குடி­யே­று­ வ­தற்கு நில­மில்­லாது இருக்­குமே தவிர, அத்­து­மீ­று­கின்ற பிரச்­சி­னை­கள் எழா.

வச­தி­வாய்ப்­புக்­க­ளு­டன் குடி­யே­றும்
பெரும்­பான்­மை­யி­னர்

2008ஆம் ஆண்டு நடுப்­ப­கு­தி­யில் போராட்­டத்­தில் ஈடு­பட்­டி­ருந்த ஒரு­வர் ‘‘புலி­க­ளின் பலம் காடும், கட­லும் தான். அவை இரண்­டும் படிப்­ப­டி­யாக பறி­போய்க்­கொண்­டி­ருக்­கின்­றன. இவை இரண்­டும் முழு­மை­யாக இலங்கை இரா­ணு­வத்­தி­ன­தும், கடற்­ப­டை­யி­ன­தும் கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்­டு­வ­ரப்­பட்­டால், போராட்­டம் முடி­வுக்கு வந்­து­வி­டும்’’ என்­றார்.

அவர் குறிப்­பிட்ட அதே­வி­ட­யம் 2009ஆம் ஆண்டு மே 19ஆம் திக­திக்­குள் நடந்து முடிந்­தது. ஆழ ஊடு­ரு­வும் படைப்­பி­ரி­வி­னர் புலி­கள் ஒளித்­தி­ருக்­கக்­கூ­டிய காடு­க­ளுக்­குள் நிலை எடுத்­தி­ருந்­தார்­கள். கடற்­ப­டை­யி­னர் வன்­னி­யி­லி­ருந்து வெளி­யே­று­ப­வர்­க­ளைத் தடுப்­ப­தி­லும் பன்­னாட்­டுக் கடல் எல்­லைக்­குள் இருந்து வன்­னியை நோக்கி வரு­கின்ற கப்­பல்­க­ளைத் தடுப்­ப­தி­லும் பல வரிசை கடற் கண்­கா­ணிப்­புக்­களை ஏற்­ப­டுத்தி, அவற்­றைக் கட்­டுப்­ப­டுத்­தி­னர்.

இந்­தப் பின்­ன­ணி ­யு­டன் பார்த்­தால் மட்­டுமே முல்­லைத்­தீ­வில் தற்­போது என்ன நடந்­து­கொண்­டி­ருக்­கி­றது என்­பது புரி­யும். போர் முடி­வுக்­குக் கொண்­டு­வ­ரப்­பட்­ட­து­டன் இதற்­கான முனைப்­புக்­க­ளில் இலங்­கை­யின் அரச பொறி­மு­றையை வழி­ந­டத்­தும் குழு மற்­றும் இரா­ணு­வம், கடற்­படை என்­ப­ன­ தீவி­ர­மாக இறங்­கி­விட்­டன. சம­நே­ரத்­தில் எமது அர­சி­யல் தலை­வர்­க­ளுக்கு அந்த விட­யம் புரிந்­தி­ருக்­க­வில்லை.

நெடுங்­கேணி ஒதி­ய­ம­லைக்கு அப்­பால் கைவி­டப்­பட்­டி­ருந்த கென்­பாம், டொலர்­பாம் பகு­தி­கள் இதன் முதற்­கட்­ட­மாக அபி­வி­ருத்தி செய்­யப்­பட்­டன. அந்த வரி­சை­யில் வரும் பட்­டிக்­கு­டி­யி­ருப்­புக்கு அடுத்­த­தாக சம்­பத்­நு­வர பிர­தேச செய­ல­கம் அபி­வி­ருத்தி செய்­யப்­பட்­டது. இங்கு பாட­சா­லை­கள், வைத்­தி­ய­சாலை, தபாற் கந்­தோர் போன்ற முக்­கிய தேவை­கள் நிறை­வு­செய்­யப்­பட்­டன.

இந்­தப் பிர­தேச செய­ல­கத்­தில் 7சிங்­கள கிரா­ம­சே­வை ­யா­ளர்­கள் பிரி­வு­கள் உரு­வாக்­கப்­பட்­டன. முல்­லைத்­தீ­வி­லி ­ருந்து சம்­பத்­நு­வர பிர­தே­சம் அண்­ண­ள­வாக 50 கிலோ­மீற்­றர்­கள் தூரத்­தில் அமைந்­தி­ருக்­கி­றது.

ஆனால், நெடுங்­கேணி நக­ருக்கு 26கிலோ­மீற்­றர்­களே. எனவே சம்­பத்­நு­வர – நெடுங்­கேணி வீதி காப்­பெட் போடப்­பட்டு சம்­பத்­நு­வர பகு­தி­யி­லி­ருந்து சிங்­கள மக்­கள் தமக்­குத் தேவை­யான பொருள்க­ளைக் கொள்­வ­னவு செய்­வ­தற்கு நெடுங்­கேணி நோக்­கிச் செல்­கின்ற வசதி ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது.

இது வழ­மை­யாக்­கப்­பட்­டுப் பல வரு­டங்­கள் கழிந்­து­விட்­டன. நெடுங்­கே­ணி­யி­லி­ருந்து சம்­பத்­நு­வர வரை பார்த்­தால் நெடுங்­கேணி, 2ஆம் கட்டை, பெரி­ய­பு­ரம், ஒதி­ய­மலை, தனிக்­கல்லு, கல்­யா­ண­புர, சம்­பத்­நு­வர என விரிந்து செல்­லும். இதில் சிங்­க­ளக் கிரா­மங்­க­ளுக்கு எல்­லைப்­ப­கு­தி­யில் அமைந்­தி­ருந்த தமிழ்க் கிரா­மம் தனிக்­கல்லு என்­ப­தா­கும். இந்­தக் கிரா­மத்­தில் காரை­ந­க­ரைச் சேர்ந்த 5 குடும்­பங்­கள் குடி­யேறி இருந்­தன. தற்­போது அந்­தக் குடும்­பங்­கள் அங்­கில்லை.

இரா­ணு­வத்­தி­னர் வச­மா­கி­விட்ட
கவ­னிக்­கப்­ப­டாத பகுதி!

சம்­பத்­நு­வர பகு­திக்கு மகா­வலி நீரைக்­கொண்­டு­வ­ரு­கிற திட்­ட­மும் காணப்­ப­டு­கி­றது. இந்­தப் பகு­தி­யில் முஸ்­லிம்­களோ, தமி­ழர்­களோ குடி­யே­று­வ­தற்கு அனு­ம­திக்­கப்­ப­ட­மாட்­டார்­கள் என்­பது தெளி­வா­கி­றது. இந்­திய இரா­ணு­வம் இலங்­கை­யில் நிலை­கொண்­டி­ருந்­த­போது புலி­கள் நிலை­கொண்­டி­ருந்த மண­லாறு, அளம்­பில், நித்­தி­கைக்­கு­ளம் காட்­டுப்­ப­கு­தி­கள் மிக­வும் அடர்ந்த காட்­டுப்­ப­கு­தி­க­ளா­கும்.

இந்­தப் பகு­தி­யில் உள்ள ‘உடங்கா’ எனும் காட்­டுப்­ப­குதி அதி­லும் மிக­வும் அடர்ந்த காட்­டுப்­ப­கு­தி­யா­கும். இந்­தக் காட்­டுக்­குள் சூரிய ஒளி­ப­டாத அள­வுக்கு இறுக்­க­மா­ன­தும், உய­ர­மா­ன­து­மான மரங்­கள் இருந்­தன. ஒட்­டு­சுட்­டானை அண்­மித்த காடு­க­ளில் கூட 100அடிக்கு மேற்­பட்ட உய­ர­மான வீர மரங்­கள் காணப்­பட்­டன. இந்த இயற்­கைக் காடு­க­ளில் கள­வாக மரம் தறிப்­ப­வர்­க­ளுக்­குப் புலி­கள் கடும் தண்­டனை வழங்­கி­னர்.

கள­வாக மரம் வெட்டி ஏற்­று­வ­தற்­குப் பயன்­ப­டுத்­தப்­பட்ட வாக­னங்­களை கொழுத்­தும் உத்­த­ர­வைக்­கூ­டப் பிர­பா­க­ரன் பிறப்­பித்­தி­ருந்­த­தை­ அறி­ய­மு­டி­கி­றது. மண­லாற்றை அண்­மித்த காட்­டுப் பகு­தி­யு­டன் கிழக்கு மாகா­ணக் காடு­கள் தொடர்­புற்று இருந்­தன. இவ்­விரு காடு­க­ளுக்­கும் இடை­யி­லான பாதையை ‘‘பேய்­றூட்’’ (பேய்ப்­பாதை) எனப் புலி­கள் அழைத்­த­னர்.

விடு­த­லைப் புலி­க­ளின் படைப்­பி­ரி­வில் வன்­னிக் காடு­கள் பற்­றிய முழு­மை­யான அனு­ப­வம் மாத்­தையா, தள­பதி பால்­ராஜ் ஆகி­யோ­ருக்கு இருந்­த­தாக அறி­ய­ மு­டி­கி­றது. ஆனால் வன்­னிக் காடு­கள் தொடக்­கம் கதிர்­கா­மம் காடு­கள் வரை முழு­மை­யா­கத் தெரிந்த ஒரே­யொரு தள­ப­தி­யாக ராம் மட்­டுமே இருந்­தார் என்­பது பல­ருக்­குத் தெரி­யாது. 1990 ஆம் ஆண்டு திரு­கோ­ண­ம­லை­யி­லி­ருந்து தமிழ் மக்­கள் வெளி­யேறி வந்­த­போது, அந்த மக்­களை ‘பேய்­றூட்’ ஊடாக முல்­லைத்­தீவு வரை அழைத்து வந்­தது பல­ருக்­கும் தெரிந்த செய்தி.

அதே­வேளை, புலி­கள் வச­மி­ருந்த ‘உடங்கா’ பகு­தி­யை­யும் நித்­தை­கைக்­கு­ளம் காட்­டுப் பகு­தி­யை­யும் இணைக்­கும் பகுதி ‘சிங்­கப்­பூர் வெட்டை’ என அழைக்­கப்­பட்­டது. ‘உடங்க’ காட்­டுப்­ப­குதி முத­லிப்­ப­ழம் (முர­ளிப்­ப­ழம்)பெயர் பெற்­றது என்­ப­தும் குறிப்­பி­டத்­தக்­கது.

அளம்­பில் கடற்­க­ரை­யூ­டா­கத் தமிழ்­நாட்­டு­டன் தொடர்பு கொள்­ளக்­கூ­டிய கடற்­தொ­டர்­பு­ண்டு. இத்­த­கைய பெரும் காட்­டுப்­ப­குதி தற்­போது இரா­ணு­வத்­தால் இர­க­சி­ய­மாக அழிக்­கப்­பட்டு வரு­கி­றது. அங்கு இரா­ணு­வத்­தின் நிர்­வா­கத்­தின் கீழ் மகா­வலி நீரின் உத­வி­யு­டன் பொரிய பண்­ணை­யொன்று அமைக்­கப்­பட்டு வரு­வ­தா­க­வும் செய்­தி­கள் கூறு­கின்­றன. இந்த இடங்­க­ளுக்கு வட­மா­காண சபை­யி­னரோ தமிழ் அர­சி­யல் வாதி­களோ செல்­ல­மு­டி­யாது.

இது முற்­று­மு­ழு­தாக இரா­ணுவ நோக்­கத்­து­டன் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் ஓர் எச்­ச­ரிக்கை ஏற்­பா­டா­கும். இனி எந்­தச் சந்­தர்ப்­பத்­தி­லும் புலி­கள் போன்­ற­தொரு போராட்ட அமைப்பு காட்­டுக்­குள் பின்­த­ள­ மொன்றை வைத்­தி­ருக்­கா­த­வாறு தடுப்­பதே இதன் நோக்­க­மா­கும். அத்­து­டன் நிலமும் இரா­ணுவ உட­மை­யா­கி­வி­டும்.

தமி­ழர்­க­ளின் புறக்­க­ணிப்பு நிலை

முல்­லைத்­தீ­வி­லி­ருந்து திரு­கோ­ண­மலை வரை­யான கடற்­கரை ஓரங்­க­ளான அளம்­பில், கொக்­குத்­தொ­டு­வாய், கொக்­கி­ளாய், புல்­மோட்டை, திரி­யாய், புட­வைக்­கட்டு, குச்­ச­வெளி, கும்­பு­றுப்­பிட்டி, இறக்­கக் கண்டி, நிலா­ வெளி, உப்­பு­வெளி ஆகிய கரை­யோ­ரப் பகு­தி­களை கடற்­ப­டை­யின் கண்­கா­ணிப்­பில் வைத்­தி­ருக்க முனை­வ­தைப் போருக்­குப் பின்­பான காலங்­க­ளில் அவ­தா­னிக்­க­லாம்.

இதன் ஒரு கட்­ட­மா­கவே கொக்­கி­ளாய்ப் பகு­தி­யில் 300 சிங்­க­ளக் குடும்­பங்­க­ளைக் குடி­யேற்­றும் நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கி­றது. இதன் மூலம் காடும் கட­லும் இலங்கை அர­சின் கண்­கா­ணிப்­புக்­குள் உட்­பட்டு விட்­டது என்றே கொள்­ள­மு­டி­யும்.

தமிழர்கள் செறிந்து வாழும் வடக்­குக் கிழக்கை எடுத்­துக்­கொண்­டால், 1983ஆம் ஆண்டு காலப்­ப­கு­தி­யில் இருந்து வடக்­கில் காங்­கே­சன்­து­றை­யி­லி­ருந்­தும் மேற்­காக இர­ணை­தீ­வி­லி­ருந்­தும் தென்­கி­ழக்­கில் கஞ்­சி­கு­டிச்­சாறு பகு­தி­யி­லி­ருந்­தும் இரா­ணுவ நட­வ­டிக்­கை­கள் கார­ண­மா­க ஒதுங்­கிக்­கொண்டே வந்­த­னர். அவ்­வி­டங்­க­ளில் இரா­ணு­வம் நிலை­கொண்­டது. அதன் இறு­திப் புள்­ளி­யாக அல்­லது இறு­தித் தமிழ்க் கிரா­ம­மாக முள்­ளி­வாய்க்­கால் 2009 மே 19இல் இலங்கை இரா­ணு­வத்­தின் வச­மா­னது.

போராட்­டம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்ட பின்­னர் தான் வன­வ­ளத் திணைக்­க­ளம், நில அள­வைத் திணைக்­க­ளம், தொல்­லி­யல் திணைக்­க­ளம், நீர்ப்­பா­ச­னத் திணைக்­க­ளம் போன்­றன தமது 30வருட கால நித்­தி­ரை­யைக் கலைத்­துத் துரித பணி­யில் இறங்­கின.
நிலமை இப்­ப­டி­யி­ருக்க, தமது இனப்­பெ­ருக்­கத்தை மிக மோச­மா­கக் குறுக்­கிக் கொண்­டுள்ள உள்­நாட்டுத் தமி­ழர்­கள், நாட்­டை­விட்டு வெளி­யே­றிக்­கொண்­டி­ருக்­கும் தமி­ழர்­கள் ஆகிய இரண்டு தரப்­பி­ன­ரா­லும் புதி­தாக ஒரு குடி­யி­ ருப்பை உரு­வாக்­கும் நிலை ஏற்­ப­டப்­போ­வ­தில்லை.

தவிர, தமது நிலங்­க­ளில் இருப்­ப­து கூ­டக் கேள்­விக்­குள்­ளா­கின்­றது. இந்­த­வி­டத்­தில்­தான் யாழ்ப்­பாண மாவட்ட செய­ல­ரின் மேற் கூ­றிய கூற்­றைச் செய­லூக்­கப்­ப­டுத்த வேண்­டி­யி­ருக்­கி­றது.

குறைந்த பட்­சம் தமக்­கெ­னப் பதி­வி­லுள்ள நிலத்­தி­லா­வது தமி­ழர்­கள் குடி­ய­ம­ர­ வேண்­டும். வெளி­நா­டு­க­ளில் இருந்து நிலங்­களை ஆட்­சி­செய்­வ­தற்­கும், பரம்­பரை நிலங்­க­ளைத் தரி­சா­கத் திறந்து கவ­னிப்­பா­ரற்­றுக் கிடக்­கச் செய்­வ­தற்­கும் முற்­றுப்­புள்ளி தேவை.

இத்­த­கைய நிலங்­கள் எதிர்­கா­லத்­தில் தமி­ழ­ரின் கைக­ளில் இருப்­பது சந்­தே­கமே. மக்­க­ளும் மக்­கள் பிர­தி­நி­தி­ க­ளும் தமது நிலத்­தில் நிலை­கொள்­வ­தைப் பற்­றி­யும் நிலை­ கொள்­வ­தற்கு ஏற்ப வசதி வாய்ப்­புக்­க­ளைப் பெற்­றுக்­கொள்­வதை, பெற்­றுக்­கொ­டுப்­ப­தைப் பற்­றி­யும் இனியும் சிந்­தித்துக் கொண்டிருக்க முடியாது. செயற்­ப­டுத்­து­வ­தற்கு விரை­தல் வேண்­டும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!