தி.மு..க இருக்கும் கூட்டணியில் அ. ம. மு. க. இடம்பெறாது – ரி. ரி. வி. தினகரன்

தி.மு.க. இருக்கும் கூட்டணியில் அம்மா மக்கள் முனனேற்ற கழகம் ஒருபோதும் இணையாது என அக்கட்சியின் துணைப் பொது செயலாளரான ரி. ரி. வி. தினகரன் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது,

தமிழகத்தில் எந்த பகுதியிலும் தூர் வாரும் பணி முறையாக நடைபெறவில்லை. அமைச்சர்கள் பொய்யான தகவல்களை தெரிவிக்கிறார்கள்.

தமிழக அரசு மழை புயல் காலத்தில் மெத்தன போக்கை கையாள்கிறது. மக்களை பாதுகாக்கும் செயல்களில் அரசு ஈடுபடவேண்டும். மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம். தி.மு.க. இடம்பெற்றிருக்கும் கூட்டணியில் அம்மா மக்கள் கூட்டணி ஒரு போதும் இணையாது.” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!