பகிரங்க மன்னிப்பு கோரிய சம்சுங் நிறுவனம்!!!

சம்சுங் எலக்ட்ரோனிக்ஸ் நிறுவனமானது புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள மற்றும் நோய்த்தாக்கத்தினால் உயிரிழந்த தனது தொழிலாளர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளது.

சம்சுங் செமிகண்டக்ட்டர் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த 240 தொழிலாளர்கள் உடல் நிலை பாதிப்புக்குள்ளாகி அதில் 80 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.

16 வகையான புற்றுநோய் மிக அரிதான உடல் நல பாதிப்பு கருக்கலைப்பு மற்றும் சில தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து கணினி சில்லு மற்றும் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கு ஒரு பாதுகாப்பான சூழலை உருவாக்க தவறி விட்டதாக தென் கொரிய தொழிநுட்ப நிறுவனம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியள்ளது.

அத்தோடு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கவும் சமசுங் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

இருப்பினும் பாதிக்கப்பட்டவர்கள் இந்த மன்னிப்பும் இழப்பீடும் தொழிற்சாலையால் கடந்த காலங்களில் தாங்கள் அனுபவித்த கஷ்டங்களுக்கும் அவமரியாதைகளுக்கும் ஈடாகாது என தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!