ஸ்ட்ரோபரி பழத்தில் ஊசி: மீண்டும் கிளம்பிய சர்ச்சை

நியூசிலாந்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஸ்ட்ரோபரி பழத்தில் ஊசி காணப்பட்டமை பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் ஊசி காணப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜெரல்டின் என்ற நகரத்திலுள்ள சந்தையில் விற்பனை செய்யப்பட்ட பழத்தில் குறித்த ஊசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதுகுறித்து நியூசிலாந்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த செப்டெம்பர் மாதம் அவுஸ்ரேலியாவில் ஸ்ட்ரோபரி பழங்களில் ஊசி காணப்பட்டமை கண்டறியப்பட்டது. இது தொடர்பாக பல முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்ட நிலையில், இது நியுசிலாந்திற்கும் பரவியுள்ளது. அந்தவகையில் உலகளாவிய ரீதியிலான பழ விநியோகத்தில் இந்த தவறு நடந்திருக்கலாமோ என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!