கடனாவில் வலி நிவாரணி மருந்தை போதைக்காக பயன்படுத்தி உயிரிழந்த தமிழ் வழக்கறிஞர்!

கடனாவில் தற்போது வலி நிவாரணி மருந்தை போதைக்காக பயன்படுத்தி உயிரிழந்தவர்கள் தொடர்பான நெருக்கடி தற்போது தீவிரமடைந்துள்ளது. இந்த வரிசையில் கனடா டொரோண்டோவில் Balachandran law office எனும் பிரபலமான சட்ட ஆலோசகர் அலுவலகத்தை நிறுவி நடத்தி வந்த தமிழ் வழக்கறிஞர்அகி பாலச்சந்திரன் (Aghi Balachandran) உயிரிழந்துள்ளார்.

இவர் fentanyl என்ற வலி நிவாரணி மருந்தை போதைக்காக பயன்படுத்தி இறந்ததாக கனடா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் இவர் வலிநிவாரணி மருந்தை உட்கொண்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்து சிகிச்சை பலனிற்றி இவர் சனிக்கிழமை உயிரிழந்தாக கூறப்படுகின்றது. மேலும் அவருடன் ரொறன்ரோ வெஸ்ட் மாடிக்குடியிருப்பில் தங்கியிருந்த வேறு ஒரு பெண்ணும் சடலமான கண்டெடுக்கப்பட்டுள்ளர் எனவும் இருவரும் 30 வயது மதிக்கத்தக்கவர்கள் என்று பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை குயின்-டஃப்பரின் வீதியில் உள்ள குறித்த மாடிக் குடியிருப்பில் அளவுக்கதிகமான வலி நிவாரணி அருந்திய சம்பவத்துடன் மூன்று பேர் சம்பந்தப்பட்டிருந்ததுடன், இரவு 8.20 அளவில் பொலிஸாருக்கு சம்பவம் தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இது தொடர்பாக பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!