அட்மிரல் ரவியை வெலிக்கடைச் சிறையில் பார்வையிட்டார் மகிந்த

கொழும்பில் 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை, சிறிலங்காவின் பிரதமர் மகிந்த ராஜபக்ச சந்தித்து நலன் விசாரித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச நேற்று, அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன தடுத்து வைக்கப்பட்டுள்ள வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு அவரைப் பார்வையிட்டுள்ளார்.

இதனை மகிந்த ராஜபக்சவின் ஊடகச் செயலர் றொகான் வெலிவிட்ட உறுதிப்படுத்தியுள்ளார்.

வெலிக்கடைச் சிறையில், அட்மிரல் விஜேகுணரத்னவை பார்வையிடச் சென்ற மகிந்த ராஜபக்ச, தண்டனைக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா மற்றும் பொது பலசேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர் ஆகியோரையும் சந்தித்துள்ளார் என்றும் றொகன் வெலிவிட்ட கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!