சர்வதேச நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தான் த.தே.கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்கவேண்டும் :சிவாஜிலிங்கம்

சர்வதேச நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தான் ஆட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்கவேண்டும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம்.இலங்கை தமிழ் மக்கள் மீது அக்கறை காட்டுகின்ற சர்வதேச நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தென்னிலங்கை ஆட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்கவேண்டுமே தவிர தெற்கிலுள்ள அதிகாரப் போட்டிக்குள் கூட்டமைப்பு நுழையக்கூடாது என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஐக்கியதேசிய முன்னணிக்கு ஆதரவு தெரிவித்தமை தொடர்பில் கேட்டபோதே அவர்இதனைத் தெரிவித்தார்.

இவ் விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்

தென்னிலங்கையில் தற்போதைய அதிகாரப் போட்டிக்குள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நுழையக்கூடாது அதற்குள் நாங்கள் செல்லுவும் தேவையில்லை அரசியல் அமைப்பில் மீறலுக்கு எதிராகவும் மகிந்த ராஜபக்ஷவை பிரதமர் ஆக்கியமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்தமை இவற்றுடன் எமது வேலைகள் முடிவுக்கு வந்தது.

இதற்குப் பின்னர் யார் ஆட்சி அதிகாரத்தில் நுழைவது பற்றி எமக்குத் தேவையில்லை கடந்த மூன்றரை வருடங்களாக செய்யமுடியாததை தற்போது ஒரு பகுதியினர் செய்வார்கள் என்பதை எவ்வாறு நம்புவது

இதேவேளை எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலானாலும் சரி பாராளுமன்றத் தேர்தலானாலும் சரி ஆட்சிக்கு வருபவர்களுடன் புதிதாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவது என்பது வேறு ஆனால் தற்போதைய குழப்பமான நிலையில் ஒரு தரப்புக்கு மட்டும் ஆதரவு தெரிவித்து மற்றை தரப்பிற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது என்பது வேறு குறித்த விடையங்களில் தெளிவான முடிவுகள் எடுக்கப்படவேண்டும்.

தற்போதைய சூழலில் ஜக்கிய தேசிய முன்னணிக்கு முண்டு கொடுக்கவேண்டிய அவசியம் கிடையாது. அப்படியில்லை என்றால் அரைகுறை விடையங்களைக் கதைக்காது குறிப்பாக அரசியல் கைதிகள் விடுதலை, வடக்கு கிழக்கு இணைப்பு போன்றவற்றை சாதாரண பெரும்பான்மை மூலம் செய்யமுடியும். அல்லது பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது போன்றவற்றை செய்வதன் மூலம் இதனைச் செய்பவர்களுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் தீர்மானிக்கலாம் .

இதனைவிடுத்து அதனைச் செய்வோம் இதனைச் செய்வோம் அரசியல் தீர்வை முன்வைப்போம் என்று கூறுவதை விடுத்து ஆக்கபூர்வமான செயற்பாட்டை செய்யபவர்களுக்கு ஆதரவை வழங்குவதை பற்றித் தீர்மானிக்கவேண்டும்.

எது எவ்வாறு இருப்பினும் தமிழ் மக்கள் நலன் தொடர்பில் எந்த அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவது தொடர்பிலும் சர்வதேசம் ஒன்றின் மத்தியஸ்தத்துடனே செய்யவேண்டும் என்ற நிலைப்பாட்டினை முன்வைக்கவேண்டும்.

ஆகக் குறைந்ததாக எமது பிரச்சினைகள் தொடர்பில் அக்கறை காட்டுகின்ற இந்தியா, அமெரிக்கா ,ஐரோப்பிய யூனியன் போன்றவற்றுடன் இணக்கத்தை ஏற்படுத்தி மத்தியஸ்தம் செய்கின்ற நிலைப்பாட்டினை ஏற்படுத்தவேண்டும்.

சர்வதேசத்திற்கு முன்பாக வாக்குறுதிகளைப் பெற்றே எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும் அவ்வாறு செய்வதன் மூலம் தான் தமிழ் மக்களுக்கான அரசியல்தீர்வு மற்றும் அடிப்படைத் தேவைகள் தொடர்பில் ஓரளவுக்கேனும் சாதகமான நிலைப்பாட்டினை எடுக்கக்கூடியதாக இருக்கும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!