சம்­பந்­த­னுக்கு எதி­ரா­கத் தீர்­மா­னம்!!

எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­த­னுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­ னத்தை நாடா­ளு­மன்­றத்­தில் சமர்ப்­பிக்க மகிந்த அணி தீர்­மா­னித்­தி­ருக்­கின் றது என்று மிக நம்­ப­க­ர­மாக அறி­ய­மு­டி­கின்­றது.

முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வைச் சந்­தித்து மகிந்த அணி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் நேற்று இதற்­கான மந்­தி­ரா­லோ­ச­னை­க­ளில் ஈடு­பட்­ட­னர் எனத் தெரி­ய­வ­ரு­கின்­றது.

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­துக்கு எதிர்க்­கட்­சித் தலை­வர் என்ற அந்­தஸ்­தி­லி­ருந்து எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­க­ளின் ஆலோ­சனை கேட்­கா­மல் எதிர்ப்பை வெளி­யிட்­டமை, ரணி­லி­ட­மி­ருந்து தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­காக தலா 2 கோடி ரூபா பெற்­றுக்­கொ­டுத்­த­தா­கக் கூறப்­ப­டும் விவ­கா­ரம், அர­சின் அநீ­தி­யான திட்­டங்­க­ளுக்கு எதி­ரா­கக் குரல் கொடுக்­காமை உட்­பட பல கார­ணங்­க­ளைக் காட்டி இந்த நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்­ளது என்று மகிந்த அணி­யின் முக்­கிய பிர­மு­கர் ஒரு­வர் நேற்று தெரி­வித்­தார்.

இதற்­கான ஏற்­பா­டு­க­ளைச் செய்து சட்ட ஆலோ­ச­னை­க­ளைப் பெறும் நட­வ­டிக்­கை­கள் தற்­போது இடம்­பெ­று­கின்­றன என­வும் மேலும் அறி­ய­மு­டிந்­தது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!