அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் பழைய முறையில் தேர்தல்

உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­தல் கலப்பு முறை­யில் நடத்­தப்­பட்­ட­மை­யி­னால் ஏற்­பட்ட நெருக்­க­டி­யைக் கருத்­திற் கொண்டு, பழைய முறை­யி­லேயே அதா­வது விகி­தா­சார முறைப்­படி நாட்­டில் உள்ள 9 மாகாண சபை­க­ளுக்­கும், ஒரே நாளில் தேர்­தலை நடத்­து­வ­தற்கு கட்­சித் தலை­வர்­கள் கூட்­டத்­தில் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­தாக அறிய முடி­கின்­றது.

கிழக்கு, சப்­ர­க­முவ மற்­றும் வட­மத்­திய மாகாண சபை­க­ளின் ஆட்­சிக் காலம் கடந்த ஆண்டு நிறை­வுக்கு வந்­தது. வடக்கு மாகாண சபை­யி­ன தும், மேல் மாகாண சபை­யி­னதும், மத்­திய மாகாண சபை­யி­ன­தும் ஆயுள் காலம் எதிர்­வ­ரும் செப்­ரெம்­பர் 21 ஆம் திகதி நிறை­வுக்கு வர­வுள்­ளது. எஞ்­சிய 3 மாகாண சபை­க­ளி­னது ஆயுள் அடுத்த ஆண்டு நிறை­வுக்கு வரும்.

இதே­வேளை, கடந்த ஆண்டு மாகா­ண­சபைத் தேர்­தலை நடத்­தா­மல் இருப்­ப­தற்கு கூட்டு அரசு பல முயற்­சி­கள் எடுத்­தி­ருந்­தது. ஏற்­க­னவே கிடப்­பி­லி­ருந்து சட்­ட­வ­ரைவு மீதான இரண்­டாம் விவா­தத்தை நடத்தி மாகாண சபைத் தேர்­தலை ஒத்தி வைத்­தி­ருந்­தது.

இந்த விவா­தத்­தின்­போது, மாகாண சபைத் தேர்­தல்­களை கலப்பு முறை­யில் நடத்­து­வ­தற்­கும், அது­வும், உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லின் போது பின்­பற்­றப்­பட்ட 60:40 என்ற அடிப்­ப­டை­யில் அல்­லா­மல், 50 சத­வீ­தம் விகி­தா­சார், 50 சத­வீ­தம் வட்­டா­ரம் என்ற அடிப்­ப­டை­யில் நடத்த முடிவு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் புதிய கலப்பு முறை­யில் நடத்­தப்­பட்­டி­ருந்­தது. இந்­தத் தேர்­தல் பெறு­பே­று­க­ளின் அடிப்­ப­டை­யில் பல சபை­க­ளில் உறு­தி­யற்ற ஆட்சி உரு­வா­கி­யுள்­ளது. இந்­தத் தேர்­தல் முறை­யில் மாற்­றம் மேற்­கொள்ள வேண்­டும் என்று அரச தலை­வர் மைத்­தி­ரி­பால உள்­ளிட்ட, சகல அர­சி­யல் தலை­வர்­க­ளும் வலி­யு­றுத்தி வந்­த­னர்.

இந்த நிலை­யில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை நடந்த கட்­சித் தலை­வர்­கள் கூட்­டத்­தில், 9 மாகாண சபை­க­ளுக்­கும் ஒரே நாளில் தேர்­தல் நடத்த தீர்­மா­னித்­துள்­ள­து­டன், பழைய விகி­தா­சார முறை­யில் தேர்­தல் நடத்­த­வும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!