தமிழகத்தில் அடுத்த இரண்டரை வருடங்களில் பூரண மதுவிலக்கு அமுல் – பாண்டியராஜன்

தமிழகத்தில் அடுத்த இரண்டரை ஆண்டுகளில் பூரண மதுவிலக்கு அமுல்படுத்தப்படும் என்று அமைச்சர் பண்டிராஜன் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

“கீழடியில் ஐந்தாவது கட்ட அகழாய்வு இன்னும் ஒரு மாதத்தில் தொடங்கும். இதையடுத்து அனைத்து அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட பொருள்களைக் கொண்டு கண்காட்சி கூடம் அமைக்கப்படும். சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவில் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் அந்த பணியில் சிறப்பாக செயற்பட்டு வருகிறார்.

சிலைகளை கண்டறிய அவருக்கும் அவரது குழுவினருக்கும் தேவையான அனைத்து உதவிகளும் தொடர்ந்து வழங்கப்படும்.

காந்தியின் சத்தியசோதனை படிப்பவரின் மனதில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அஹிம்சைக்கு மனதை உருக்கக்கூடிய ஆற்றல் உள்ளது என்பதை அறிய முடியும்.

தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளில் பூரண மதுவிலக்கு என மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்திருந்தார். இதற்கான நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன. அடுத்த இரண்டரை ஆண்டுகளில் மீதமுள்ள கடைகளையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்”. என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!