இரா­ணு­வத்­துக்கு எதி­ரான மனுக்­களை நிரா­க­ரித்­தது முல்லைத்தீவு நீதி­மன்­றம்!!

போரின் இறு­தி­யில் இரா­ணு­வத்­தி­ன­ரி­டம் சர­ண­டைந்து காணா­மற்­போ­னோர் தொடர்­பில் தாக்­கல் செய்­யப்­பட்ட ஆள்­கொ­ணர்வு மனுக்­களை முல்­லைத்­தீவு மாவட்ட நீதி­மன்­றம் நிரா­க­ரித்­துள்­ளது. இரா­ணு­வத்­தி­ன­ரி­டம் கைய­ளிக்­கப்­பட்­டுக் காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­கள் என்ன வகை­யான, என்ன இலக்­க­மு­டைய பேருந்­தில் ஏற்­றிச் செல்­லப்­பட்­டார்­கள் என்று சாட்­சி­யங்­க­ளில் தெளி­வா­கத் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை என்­பது உள்­ளிட்ட விட­யங்­க­ளைக் கார­ண­மா­கக் குறிப்­பிட்டு ஆள்­கொ­ணர்வு மனுக்­கள் நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன.

வவு­னியா மேல் நீதி­மன்­றத்­தில் 2012ஆம் ஆண்டு 5 ஆள்­கொ­ணர்வு மனு, காணா­மற் போனோ­ரின் உற­வி­னர்­க­ளால் தாக்­கல் செய்­யப்­பட்
டது. பின்­னர் 7 ஆள்­கொ­ணர்வு மனுக்­கள் தாக்­கல் செய்­யப்­பட்­டன. 2009 ஆம் ஆண்டு போரின் இறு­தி­யில் இரா­ணு­வத்­தி­ன­ரி­டம் கைய­ளித்த – சர­ண­டைந்த தமது உற­வி­னர்­களை மீட்­டுத் தரு­மாறு கோரித் தாக்­கல் செய்­யப்­பட்ட வழக்கு வவு­னியா மேல் நீதி­மன்­றத்­தி­னால், சம்­ப­வம் இடம்­பெற்ற பகுதி நீதி­மன்­ற­மா­கிய முல்­லைத்­தீவு மாவட்ட நீதி­மன்­றத்­துக்கு மாற்­றப்­பட்­டி­ருந்­தது.

முல்­லைத்­தீவு மாவட்ட நீதி­மன்­றத்­தில் மனு­தா­ரர்­க­ளின் சாட்­சி­யங்­கள் பதிவு செய்­யப்­பட்ட பின்­னர், பிர­தி­வா­தி­க­ளின் சாட்­சி­யம் பதிவு செய்­யும் நட­வ­டிக்கை 2015ஆம் ஆண்டு டிசெம்­பர் 10 ஆம் திகதி ஆரம்­ப­மா­கி­யி­ருந்­தது. முத­லில் தாக்­கல் செய்­யப்­பட்ட மூன்று மனுக்­கள் மீதான விசா­ர­ணையே இடம்­பெற்று – முடி­வுற்று அதன் அறிக்­கை­கள் வவு­னியா மேல் நீதி­மன்­றுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்த வழக்கு வவு­னியா மேல் நீதி­மன்­றில் நேற்று எடுத்­துக் கொள்­ளப்­பட்­டது. மனு­தா­ரர்­க­ளான விசு­வ­நா­தன் பாலந்­தினி, கந்­த­சாமி பொன்­னம்மா, ஜெயக்­கு­மாரி ஆகி­யோர் சார்­பில் மூத்த சட்­டத்­த­ரணி ரட்­ண­வேல் முன்­னி­லை­யா­னார். முல்­லைத்­தீவு நீதி­மன்­றி­னால் அனுப்பி வைக்­கப்­பட்ட அறிக்­கை­யில் குறிப்­பிட்ட சில விட­யங்­கள் மாத்­தி­ரம் மன்­றில் வாசித்­துக் காட்­டப்­பட்­டது.

சாட்­சி­யங்­கள் தெளி­வில்லை என்று குறிப்­பிட்டு மூன்று ஆள்­கொ­ணர்வு மனுக்­க­ளை­யும் நிரா­க­ரிப்­ப­தாக மன்­றில் தெரி­விக்­கப்­பட்­டது.
‘காணா­மல் ஆக்­க­பட்­டோர் தொடர்­பி­லான விசா­ர­ணை­களை நடத்தி அறிக்கை சமர்­பிக்­கு­மாறே வவு­னியா மேல் நீதி­மன்­றத்­தி­னால் கோரப்­பட்­டி­ருந்­தது. தீர்ப்பு வழங்­கு­வ­தற்கு முல்­லைத்­தீவு நீதி­மன்­றுக்கு அதி­கா­ர­மில்லை. முல்­லைத்­தீவு நீதி­மன்­றின் அறிக்­கை­யின் பிர­தி­யும் வழங்­கப்­ப­ட­வேண்­டும்’ என்று மனு­தா­ரர் தரப்­புச் சட்­டத்­த­ரணி ரட்­ண­வேல் கோரி­னார்.

மன்று அந்­தக் கோரிக்­கையை ஏற்­றது. பிர­தியை வழங்­கு­மாறு உத்­த­ர­விட்­டது. வழக்கு எதிர்­வ­ரும் 22ஆம் திக­திக்கு ஒத்தி வைக்­கப்­பட்­டது.

இதே­வேளை, முல்­லைத்­தீவு நீதி­மன்­றில் வழக்கு இடம்­பெற்­ற­போது, 58ஆவது படைப் பிரி­வுக்கு போரின் போது பொறுப்­பாக இருந்த சவேந்­திர சில்­வாவை மன்­றில் முற்­ப­டுத்த வேண்­டும் என்று மனு­தா­ரர் தரப்­பி­னால் கோரிக்கை விடுக்­கப்­பட்­டி­ருந்­தது.

58 ஆவது படை­ய­ணி­யின் கட்­ட­ளைத் தள­ப­தி­யாக பின்­னர் இருந்த மேஜர் ஜென­ரல் சாணக்ய குண­வர்­தன, ஆள்­கொ­ணர்வு மனுக்­க­ளில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­வர்­கள் எவ­ரும் 58 ஆம் படை­ய­ணி­யி­டம் சர­ண­டைந்­த­தற்­கான பதி­வு­கள் எது­வும் தங்­க­ளி­டம் இல்லை என்று முல்­லைத்­தீவு நீதி­மன்­றில் தெரி­வித்­தி­ருந்­தார்.

இத­னை­ய­டுத்து, சர­ண­டைந்­த­வர்­கள் தொடர்­பாக அவர்­க­ளி­ட­முள்ள பதி­வேட்டை மன்­றில் சமர்­பிக்க மனு­தா­ரர் தரப்­புக் கோரி­யி­ருந்­தது. 58ஆம் படை­ய­ணி­யால், மறு­வாழ்­வ­ளிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் பெயர்ப் பட்­டி­யலே மன்­றில் சமர்­பிக்­கப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!