தவறான வீடியோக்களை பதிவேற்றுவதில் இந்தியா முதலிடம்!

யூடியூப் சமூக வலைதளத்தில் தவறான வீடியோக்களை பதிவேற்றுவதில் இந்தியா முதலிடம் வகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2017 ம் ஆண்டின் இறுதி கால ஆண்டில் மட்டும் யூடியூப் நிறுவனத்தின் விதிகளுக்கு புறம்பாக பதிவேற்றப்பட்ட சுமார் 82 லட்சம் வீடியோக்கள் நீக்கப்பட்டதாகவும் யூடியூப் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாலியல், வன்முறை,வெறுப்புணர்வை தூண்டுதல் உள்ளிட்ட காரணங்களுகாக தவறான வீடியோக்கள் நீக்கப்பட்டதாக யூடியூப் நிறுவனம் கூறியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!