நரேந்திர மோடி கம்ப்யூட்டர் குற்றங்களை தடுப்பது குறித்த இணையதளத்தினை தொடங்கி வைத்தார்.

JAPAN-INDIA/
குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் போலீஸ் டி.ஜி.பி.க்களுக்கான 3 நாள் மாநாடு நேற்று நடைபெற்றது. மாநாட்டில் கம்ப்யூட்டர் மூலமாக மேற்கொள்ளப்படும் பணமோசடி உள்ளிட்ட குற்றங்களை (சைபர் கிரைம்) தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, கம்ப்யூட்டர் குற்றங்களை தடுப்பது குறித்த புதிய இணையதளத்தை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர், ‘இந்த இணையதளம் மூலமாக அனைத்து கம்ப்யூட்டர் மூலமாக நடத்தப்படும் குற்றங்களை அறிந்து கொள்ள முடியும். சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதில் போலீசார் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். நவீன தொழில்நுட்பமான இணையதளம், செயலிகள் (ஆப்) மூலமாக போலீஸ் பற்றிய தகவல்களையும், குற்றச்செயல்களை தடுப்பது குறித்தும் அனைத்து தரப்பினரும் அறிந்து கொள்ள செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!