மக்­களை அர­ச­சார்­பற்ற நிறு­வ­னங்­கள் தவ­றாக வழி ­ந­டத்­து­கின்­றன!!

“வடக்­கில் நடை­பெ­றும் காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் மற்­றும் அர­சி­யல் கைதி­க­ளின் போராட்­டங்­க­ளின் பின்­ன­ணி­யில் அரச சார்­பற்ற நிறு­வ­னங்­கள் பொது­மக்­க­ளைத் தவ­றாக வழி­ந­டத்­து­கின்­றன”
இவ்­வாறு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன குற்­றஞ்­சாட்­டி­யுள்­ளார்.

லண்­டன் பி.பி.சி சிங்­கள சேவைக்கு வழங்­கிய கருத்­துப் பரி­மா­றல் நிகழ்­வில் அவர் மேற்­கண்­ட­வாறு குற்­றஞ்­சாட்­டி­னார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

“போரின் போது இரா­ணு­வத்­தி­ன­ரால் பயன்­ப­டுத்­தப்­பட்ட காணி­க­ளில் 80 வீத­மா­னவை தற்­போது விடு­விக்­கப்­பட்­டுள்­ளன. புது­வ­ரு­டத்தை முன்­னிட்டு 500 ஏக்­கர் காணி அண்­மை­யில் விடு­விக்­கப்­பட்­டது. ஆனால் அது­பற்றி யாரும் பேசிக்­கொள்­ள­வில்லை. சிலர் தமது சுய இலா­பத்­துக்­கா­கக் கருத்­துக்­களை வெளி­யி­டு­கின்­ற­னர். நாட்­டைப் பிரிக்­கும் எந்­த­வொரு செயற்­பாட்­டை­யும் அனு­ம­திக்­கப் போவ­தில்லை. அவர்­க­ளு­டன் பேச்சு நடத்­த­மாட்­டேன். விடு­த­லைப் புலி உறுப்­பி­னர்­க­ளால் பல முறை லண்­ட­னில் எனக்கு எதிர்ப்­புத் தெரி­விக்­கப்­பட்­டது. என்­றா­லும் தமி­ழீ­ழம் அமை­வது சாத்­தி­ய­மற்­றது” என்­றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!