அர­சி­யல் கைதி­கள் விடு­தலை குறித்­துக் கூட்­ட­மைப்­புப் பேசும்!!

அர­சி­யல் கைதி­யான சுதா­க­ரன் உட்­ப­டப் பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டத்­தின் கீழ் நீண்­ட­நாள்­க­ளா­கச் சிறை­க­ளில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள கைதி­க­ளின் விடு­விப்புத் தொடர்­பில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­ வு­டன் கூட்­ட­மைப்­புப் பிர­தி­நி­தி­கள் விரை­வில் சந்­தித்­துப் பேச­வுள்­ள­னர் என்று கூட்­ட­மைப்­பின் ஊட­கப் பேச்­சா­ள­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார்.

யாழ்ப்­ப­ணத்­தில் நேற்­றுச் செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்­த­போது அவர் இதனை தெரி­வித்­தார்.அவர் அங்கு தெரி­வித்­தா­வது,
அர­சி­யல் கைதி­கள் விடு­தலை சம்­பந்­த­மாக நாம் அர­சுக்கு பல அழுத்­தங்­களை கொடுத்து வரு­கின்­றோம்.

அரச தலை­வர் நீண்­ட­நாள்­க­ளா­கச் சிறை­க­ளில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள கைதி­களை தமிழ் அர­சி­யல் கைதி­கள் எனக் கூறு­வ­தில்லை.பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்­தில் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­வர்­கள் என்றே அவர் கூறு­வார். மேலும் அவ்­வாறு தடுத்து வைகக்­பட்­டுள்­ள­வர்­க­ளைப் பொது மன்­னிப்­பின் கீழ் விடு­தலை செய்­யத் தாம் நட­வ­டிக்கை எடுப்­பார் என்­றும் எனக்கு கூறி­யுள்­ளார்.

ஆகவே தமிழ் அர­சி­யல் கைதி­யான ஆனந்த சுதா­க­ரன் உட்­பட நீண்ட நாள்­க­ளா­கச் சிறை­க­ளில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள அர­சி­யல் கைதி­களை விடு­தலை செய்­வது தொடர்­பாக எமக்­கும் அரச தலை­வ­ருக்­கும் இடை­யில் மிக விரை­வில் இடம்­பெ­ற­வுள்ள கட்­டம் கட்­ட­மான பேச்­சுக்­க­ளின் போது பேச­வுள்­ளோம் -என்­றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!