கூட்டு அரசின் ஆட்சியிலும் தமிழர்களுக்கு ஏமாற்றம்தான்

நல்­லாட்சி அரசு நீடிக்­குமா? என்ற சந்­தே­கம் தற்­போது எழுந்­துள்­ளது. தெற்­கின் அர­சி­யல் சூழ்­நிலை இதைக் கட்­டி­யம் கூறி நிற்­கின்­றது. இத­னால் ஏமாற்­ற­ம­டைந்­த­வர்­கள் தமி­ழர்­கள் என்­பது சொல்­லித் தெரி­ய­வேண்­டி­ய­தொன்­றல்ல

நல்­லாட்சி அர­சின் ஆட்­சிக்­கா­லத்­தில் தமது பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்வு கிடைக்­கு­மென தமிழ் மக்­கள் நம்­பி­யி­ருந்­த­னர். பெரிய கட்­சி­கள் இரண்­டும் ஒன்­றி­ணை­யும் போது தமக்கு நல்­ல­தொரு தீர்வு கிடைக்­கு­மென அவர்­கள் நம்­பி­னர். ஆனால் நிலைமை வேறா­கக் காணப்­ப­டு­கி­றது.

அடுத்த அரச தலை­வர் தேர்­த­லி­லும் போட்­டி­யிட மைத்­திரி முடிவு

அடுத்த அரச தலை­வ­ருக்­கான தேர்­த­லில் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் சார்­பில் தாமே போட்­டி­யி­டப் போவ­தாக மைத்­தி­ரி­பால சிரி­சேன கூறி­ய­தா­கச் செய்­தி­கள் வௌிவந்­துள்­ளன. அண்­மை­யில் இலண்­ட­னுக்­கான பய­ணத்தை மேற்­கொண்ட அவர் அங்கு வைத்தே இவ்­வி­தம் கூறி­ய­தா­க­வும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இது உண்­மை­யாக இருக்­கு­மா­னால் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யு­ட­னான உறவை அவர் நிரந்­த­ர­ மா­கவே துண்­டிக்­கப் போகி­றா­ரென அர்த்­தம் கொள்ள முடி­யும். தலைமை அமைச்­ச­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் கொண்­டு­வ­ரப்­பட்­ட­போது, அரச தலை­வ­ருக்­கும், தலைமை அமைச்­ச­ருக்­கு­மி­டை­யி­லான உற­வில் விரி­சல் ஏற்­பட்­டது.

தலைமை அமைச்­சர் பத­வி­யி­லி­ருந்து விலகி விடு­மாறு அரச தலை­வர் தலைமை அமைச்­ச­ரைக் கேட்­டுக் கொண்ட போது தலைமை அமைச்­சர் அதை முற்­றா­கவே நிரா­க­ரித்து விட்­டார்.

தீர்­மா­னத்­தின் மீதான வாக்­கெ­டுப்பு தலைமை அமைச்­ச­ருக்­குச் சாத­க­மாக அமைந்­து­விட்­ட­தால், அரச தலை­வர் சிர­மத்­துக்கு உள்­ளாக நேரிட்­டது. சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சிக்­குள்­ளும் சல­ச­லப்பு ஏற்­பட்­டது.

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யும், மகிந்த அணி­யும் இணைந்து ஆட்­சியை அமைக்க வேண்­டு­மென்ற கோரிக்­கை­யும் விடு­க்கப்­பட்­டது.

கட்­சியை விட்டு வௌியே­றி­யோரை மீண்­டும் கட்­சிக்­குள் கொண்­டு­வர முய­லும் அநா­க­ரீக அர­சி­யல் நடை­முறை

இதே­வேளை தலைமை அமைச்­ச­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­துக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்த சுதந்­தி­ரக் கட்­சி­யைச் சேர்ந்த 16 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் அமைச்­சர் பத­வி­களை வகித்­தி­ருந்த போதி­லும், அர­சி­லி­ருந்து வௌியே­றி­யி­ருந்­த­னர்.

இவர்­களை மீண்­டும் அர­சில் இணைத்துக் கொள்­வ­தற்­கான முயற்­சி­கள் இடம்­பெற்று வரு­கின்­றன. ஆனால் ஐ. தே. க தரப்­பி­னர் இதற்கு எதிர்ப்­புத் தெரி­வித்து வரு­கின்­ற­னர்.

இவர்­க­ளுக்கு மீண்­டும் அமைச்­சர் பத­வி­களை வழங்­கி­னால் தாம் அர­சி­லி­ருந்து வில­கி­வி­டு­வ­தாக அமைச்­சர் காமினி பொன்­சேகா கூறு­ம­ள­ வுக்கு எதிர்ப்­ப­லை­கள் அங்கு உரு­வா­கி­யுள்­ளன.

இந்த நிலை­யில் ஐக்­கிய தேசி­யக் கட்சி தனித்து ஆட்­சி­ய­மைக்க வேண்­டு­மென்ற கோரிக்­கை­யும் அந்­தக் கட்­சி­யி­லி­ருந்து விடுக்­கப்­பட் டுள்­ளது. இவற்­றை­யெல்­லாம் பார்க்­கும் போது இன்­றைய நல்­லாட்சி அரசு நீடிக்­குமா? என்ற சந்­தே­கம் எழு­கின்­றது.

அரச தலை­வர், கட்சி, ஆட்சி என்ற இரண்டு பட­கு­க­ளில் ஒரே வேளை­யில் பய­ணம் செய்­வ­தற்கு முயற்சி செய்­கின்­றார். இதுவொரு இய­லாத காரி­ய­மென்­பதை அவர் நன்­றா­கவே அறி­வார். ஆனால் நிர்ப்­பந்­தம் கார­ண­மாக அவர் அதைச் செய்­வ­தற்கு முற்­ப­டு­கின் றார்.

தெற்கு அர­சி­ய­லில் மூன்று முதன்மை அர­சி­யல் சக்­தி­கள் செயற்­பட நேர்ந்­துள்­ளது

தெற்­கைப் பொறுத்­த­வ­ரை­யில் மூன்று பிர­தான அர­சி­யல் சக்­தி­கள் காணப்­ப­டு­கின்­றன. மகிந்த ராஜ­பக்ச, மைத்­தி­ரி­பால சிரி­சேன, ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகிய மூவ­ ருமே அந்த மூன்று சக்­தி­க­ளா­கும்.
இவர்­கள் மூவ­ரும் மூன்று அர­சி­யற் கட்­சி­க­ளின் தலை­வர்­க­ளா­க­வும் உள்­ள­னர். கடந்த உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் மகிந்­த­வின் கட்­சிக்கு அதிக ஆச­னங்­கள் கிடைத்­தன. ஐக்­கிய தேசி­யக் கட்­சிக்கு இரண்­டா­வது இடம் கிடைத்­தது.

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யால் மூன்­றா­வது இடத்­தையே பிடிக்க முடிந்­தது. ஆனால் மொத்த வாக்­கு­க­ளில் 44.69 வீத­மா­னவை மட்­டுமே மகிந்­த­வுக்கு அளிக்­கப்­பட்­டவை. சுமார் 55.31 சத­வீ­த­மான வாக்­கு­கள் ஏனைய கட்­சி­க­ளுக்­குக் கிடைத்­தன. இத­னால் மகிந்த தரப்­பின் வெற்­றி­யைப் பெரி­தாக எடுத்­துக் கொள்ள முடி­ய­வில்லை.

இந்த நிலை­யில் அர­சி­யல் தீர்­வைப் பெறும்­பொ­ருட்டு தமி­ழர் பகு­தி­க­ளில் அரச நிர்­வா­கத்தை முடக்­கும் வகை­யி­லான போராட்­டங்­கள் இடம்­பெ­ற­வி­ருப்­ப­தாக கூட்­ட­மைப்­பின் சார்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஆட்­சி­யா­ளர்­கள் இதைப் பெரி­தாக எடுத்­துக் கொள்­வார்­களா? என்­பது தெரி­ய­வில்லை. ஆனால் தமி­ழர்­க­ளின் போராட்­டம் அர­சுக்கு கடும் நெருக்­க­டி­யைக் கொடுக்­கும் என்­பதை மறுக்க முடி­யாது.

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யும், ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யும் இணைந்து ஆட்­சி­ய­மைத்­தமை, இந்த நாட்­டின் வர­லாற்­றில் பெரும் திருப்­பு­மு­னை­யா­கவே அமைந்­து­விட்­டது. பிர­தான கட்­சி­கள் இரண்­டும் இணைந்து தமது பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்­வைக் காணு­மென தமி­ழர் தரப்பு பெரும் நம்­பிக்­கை­யைக் கொண்­டி­ருந்­தது.
தமது வாக்­குப் பலத்­தால், ஆத­ர­ வால் ஆட்­சிக்கு வந்­த­வரே அரச தலை­வர் என்ற உரி­மை­யை­யும் தமிழ் மக்­கள் கொண்­டி­ருந்­த­னர்.

ஆனால் இறு­தி­யில் எல்­லாமே ஏமாற்­றத்­தில் முடிந்­துள்­ளது. தென்­னி­லங்கை அர­சி­யல்­வா­தி­கள் மீண்­டு­மொரு தடவை தமது உண்­மை­யான முகத்­தைக் காட்­டி­விட்­ட­னர்.

தமி­ழர்­க­ளின் பிரச்­சி­னை­க­ ளுக்­குத் தீர்­வைக் காண்­ப­தை­வி­டுத்து எதிர்க்­கட்­சித் தலை­வர் பத­வியை வகிக்­கின்ற தமி­ழர் ஒரு­வரை அந்­தப் பத­வி­யி­லி­ருந்து அகற்­று­வ­தையே தமது பிர­தான இலக்­கா­கக் கொண்டு செயற்­ப­டு­கின்­ற­னர்.

இந்த நிலை­யில் நாட்­டில் இன ஐக்­கி­யத்­தை­யும், சக­வாழ்­வை­யும் எவ்­வாறு எதிர்­பார்க்க முடி­யும்?

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!