அமைச்­ச­ரவை மாற்­றத்­தில் அய­லு­ற­வுத்­து­றை புதி­ய­வ­ருக்கு!!

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்­கும் அய­லு­ற­வுத்­துறை அமைச்­சர் திலக் மாரப்­ப­ன­வுக்­கும் இடை­யில் உச்­சக்­கட்­டப் பனிப்­போர் ஏற்­பட்­டுள்­ள­தாக கொழும்பு அர­சி­யல் வட்­டா­ரங்­க­ளில் பேசப்­ப­டு­கின்­றது.

இத­னால் நடை­பெ­ற­வி­ருக்­கும் அமைச்­ச­ரவை மாற்­றத்­தில் மாரப்­ப­ன­வின் அய­லு­ற­வுத்­துறை அமைச்­சுப் பதவி பறிக்­கப்­ப­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

அண்­மை­யில் பொது­ந­ல­வாய நாடு­க­ளின் தலை­வர்­கள் மாநாடு லண்­ட­னில் நடந்­தது. அதில் கலந்­து­கொள்ள அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன சென்­றி­ருந்­தார்.

அய­லு­ற­வுத்­துறை அமைச்­சர் திலக் மாரப்­ப­ன­வும் சென்­றி­ருந்­தார். எனி­னும் இரு­வ­ரும் நேருக்­கு ­நேர் முகங்­கொ­டுத்­துப் பேச­வில்­லை­யென விட­ய­ம­றிந்த வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.

இந்­தத் தொடர்­பா­டல் முடக்­கத்­தால் பொது­ந­ல­வாய உச்­சி­ மா­நாட்­டுக்கு வரு­கை­ தந்த உலக நாடு­க­ளின் தலை­வர்­க­ளுக்­கும் அரச தலை­வர் மைத்­தி­ரி­பா­ல­வுக்­கும் இடை­யி­லான உத்­தி­யோ­க­பூர்வ சந்­திப்­பு­க­ளைக்­கூட ஒழுங்கு செய்ய முடி­யா­மற்­போ­ன­தாக அந்த வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.

குற்­றத் தீர்­மா­னம்
அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு எதி­ரான குற்­றத் தீர்­மா­னம் ஒன்றை நாடா­ளு­மன்­றத்­தில் நிறை­வேற்ற ஐக்­கிய தேசி­யக் கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் சிலர் முயன்­ற­மைக்­குப் பின்­ன­ணி­யில் சட்ட ஆலே­ச­னை­களை வழங்­கி­ய­வர் மாரப்­ப­னவே என்­கிற சந்­தே­கம் அரச தலை­வ­ருக்கு ஏற்­பட்­டுள்­ள­மையே இந்­தச் சிக்­க­லுக்­குக் கார­ணம் என்­றும் சில தக­வல்­கள் கூறு­கின்­றன.

குறித்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு மூத்த சட்ட வல்­லு­ந­ரான அமைச்­சர் திலக் மாரப்­பன இதற்­கான ஆலோ­ச­னை­களை வழங்­கி­யி­ருந்­தார் என்ற உள­வுத் தக­வல் மைத்­தி­ரி­யின் காது­க­ளுக்­குச் சென்­றதை அடுத்தே அவர் நாடா­ளு­மன்ற அமர்வை ஒத்தி வைத்­தார் என்­றும் கூறப்­ப­டு­கின்­றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!