20ஆவது திருத்­தத்தை கூட்­ட­மைப்பு ஏற்­குமா?

புதிய அர­ச­மைப்பு ஊடாக அர­சி­யல் தீர்வு ஒன்றை அடை­வ­தற்கு இடை­யில் அரச தலை­வ­ரின் நிறை­வேற்று அதி­கா­ரத்தை ஒழிக்­கும் வகை­யில் கொண்­டு­வ­ரப்­ப­டும் 20ஆவது திருத்­தத்தை அதன் தற்­போ­தைய வடி­வத்­தில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு வர­வேற்­காது என்று தெரி­கின்­றது.

நிறை­வேற்று அரச தலை­வர் முறைமை ஒழிக்­கப்­ப­ட­வேண்­டும் என்­கிற கட்­சி­யின் கொள்­கை­யில் மாற்­றம் இல்லை என்­ற­போ­தும் அர­சி­யல் தீர்வு, தேர்­தல் முறை மாற்­றம் என்­ப­வற்­றை­விட்­டு­விட்டு அரச தலை­வ­ரின் நிறை­வேற்று அதி­கா­ரத்தை மட்­டும் ஒழிப்­பதை ஏற்க முடி­யாது என்று தெரி­வித்­தார் கட்­சி­யின் பேச்­சா­ளர் எம்.ஏ.சுமந்­தி­ரன்.

‘‘அர­சி­யல் தீர்வு, நிறை­வேற்று அதி­கார அரச தலை­வர் முறைமை ஒழிப்பு, தேர்­தல் முறை ஆகிய மூன்று விட­யங்­கள் தொடர்­பில் அர­ச­மைப்­புப் பேரவை ஏற்­க­னவே ஆராய்ந்­தது. இதில் ஒன்றை மாத்­தி­ரம் எடுத்­துச் செய்­வதை ஏற்­றுக்­கொள்­ள­மு­டி­யாது. முக்­கி­ய­மான பிரச்­சி­னை­க­ளுக்­குச் சேர்த்தே தீர்வு காண­வேண்­டும். அதற்­காக நாங்­கள் இதனை எதிர்­கின்­றோம் என்று சொல்ல முடி­யாது’’ என்­சு­றார் மந்­தி­ரன்.

நிறை­வேற்று அரச தலை­வர் முறை­மையை ஒழிப்­ப­தற்­காக 20ஆவது திருத்­தச் சட்­ட­வ­ரைவு ஒன்று நாடா­ளு­மன்­றத்­திற்­குக் கொண்டு வரப்­ப­ட­வுள்­ளமை தொடர்­பில், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நிலைப்­பாடு என்ன என்று உத­யன் கேள்வி எழுப்­பி­யது அதற்­குப் பதி­ல­ளித்த அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

20ஆவது திருத்­தச் சட்­ட­வ­ரை­வில் நிறை­வேற்று அதி­கார முறைமை ஒழிப்பை பற்றி மாத்­தி­ரம்­தான் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
தமிழ் அர­சுக் கட்­சி­யின் 2014ஆம் ஆண்டு மாநாட்­டி­லேயே நிறை­வேற்று அதி­கார அரச தலை­வர் முறைமை ஒழிக்­கப்­ப­ட­வேண்­டும் என்று தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டு­விட்­டது.

எமது அந்­தக் கொள்கை நிலைப்­பாட்­டில் எந்த மாற்­ற­மு­மில்லை.
1978ஆம் ஆண்­டு­தான் நிறை­வேற்று அரச தலை­வர் முறைமை கொண்டு வரப்­பட்­டது. ஆனால் மிகப் பெரிய பிரச்­சி­னை­யான இனப் பிரச்­சினை 1948ஆம் ஆண்­டி­லி­ருந்தே தொடர்­கின்­றது. இனப் பிரச்­சி­னை­யால்­தான் பல லட்­சம் பேர் உயி­ரி­ழந்­த­னர்.

நிறை­வேற்று அதி­கார அரச தலை­வர் முறை­யால் யாரும் உயி­ரி­ழக்­க­வில்லை. அதற்­காக நிறை­வேற்று அதி­கார முறை­மையை அகற்­ற­வேண்­டும் என்ற நிலைப்­பாட்­டில் மாற்­ற­மில்லை. அதை ஆத­ரிப்­போம் என்று சொன்­னா­லும் அதைத் தனித்­துச் செய்­வது சரி­யா­ன­தல்ல.

அர­ச­மைப்பு பேர­வை­யில்­கூட நிறை­வேற்ற அதி­கார முறைமை ஒழிப்­புக் குறித்­துப் பேசப்­பட்­டது. அர­சி­யல் தீர்வு, நிறை­வேற்று அதி­கார அரச தலை­வர் முறை­மையை ஒழித்­தல், தேர்­தல் முறை ஆகிய மூன்­றும் ஒரே­ய­டி­யாக நடை­பெற்­றாக வேண்­டும். இதில் ஒன்றை மாத்­தி­ரம் எடுத்­துச் செய்­வதை ஏற்­றுக் கொள்­ள­மு­டி­யாது. முக்­கி­ய­மான பிரச்­சி­னை­க­ளுக்­குச் சேர்த்தே தீர்வு கண்­டாக வேண்­டும் – – என்­றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!