ஐ – போன் வாங்குவதற்காக சீன இளைஞர் செய்த காரியம்

சீனாவில் ஐ – போன் வாங்குவதற்காக கறுப்பு சந்தையில் சிறுநீரகத்தை விற்ற இளைஞரின் வாழ்க்கை தற்போது பரிதாபகரமான நிலையிலுள்ளது.

சீனாவில் 25 வயதான வாங் என்ற இளைஞர் ஐ-போன் வாங்குவதற்காக பணத்திற்கு ஆசைப்பட்டு கறுப்பு சந்தையில் தன்னுடைய சிறுநீரகத்தை விற்பனை செய்துள்ளார்.

இந்நிலையில் குறித்த இளைஞர் ஐ-போன் மற்றும் ஐ-போட் வாங்குவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்ததால், தன்னாலும் அதனை வாங்க முடியும் என்பதை தனது சக தோழர்களுக்கு நிரூபிக்க ஆசைப்பட்டார்.

இந்நிலையில் குறித்த இளைஞனின் பணத்தை பெற்றோர் எடுத்துக்கொண்ட நிலையில், குறித்த இளைஞனுக்கு இணையத்தளத்தில் அறிமுகமான நண்பர்கள் சிலர், உதவுவதாக தெரிவித்தமையை தொடர்ந்து நண்பர்களை நம்பி சத்திர சிகிச்சை செய்துள்ளார்.

இந்நிலையில் குறித்த இளைஞனின் சத்திர சிகிச்சை சரியாக செய்யாததால் குறித்த இளைஞனின் மற்றைய சிறுநீரகத்தில் நோய்த்தொற்று ஏற்பட்டு தற்போது அவர் மிகவும் பரிதாப நிலைக்குத்தள்ளப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!