தீர்­மா­னம் வரட்­டும் தக்க பதிலை அப்­போது கூறு­வேன் -சம்­பந்­தன்!!

எனக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்தை மகிந்த அணி முத­லில் நாடா­ளு­மன்­றத்­துக்கு கொண்டு வரட்­டும். அதன் பின்­னர் எனது பதிலை -– தக்க பதி­ல­டியை அப்­போது சொல்­வேன். இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்­க் கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார்.

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் தோற்­றுள்ள சூழ­லில், எதிர்­க்கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­த­னுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் முன்­வைக்க மகிந்த அணி தீர்­மா­னித்­துள்­ளது.

முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச தலை­மை­யில் கூட்டு எதி­ர­ணி­யி­னர் இது தொடர்­பில் கொழும்­பில் நேற்று முன்­தி­னம் கூடி ஆராய்ந்­துள்­ள­னர்.

இது தொடர்­பில் எதிர்­கட்­சித் தலை­வ­ரும், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­த­னி­டம் ‘உத­யன் பத்­தி­ரிகை’ கேள்வி எழுப்­பி­யது.

‘மகிந்த அணி­யி­னர் எனக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்தை முத­லில் நாடா­ளு­மன்­றத்­தில் கொண்­டு­வ­ரட்­டும். சபா­நா­ய­க­ரி­டம் அவர்­கள் அத­னைச் சமர்­பித்த பின்­னர் அவர்­க­ளுக்கு தக்க பதிலை நான் கூறு­வேன். அது­வரை நான் பொறு­மை­யாக இருப்­பேன். மேல­திக கருத்­துக்­க­ளைக் கூற­வி­ரும்­ப­வில்லை’ என்று பதி­ல­ளித்­தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!