நிலையான மாற்றத்துக்காக மைத்திரி மந்திராலோசனை!!

கூட்­ட­ர­சின் அமைச்­ச­ர­வை­யில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு தீர்­மா­னித்­துள்ள அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, இந்த விட­யம் தொடர்­பில் தீவிர ஆலோ­ச­னை­க­ளில் ஈடு­பட்­டு­வ­ரு­கி­றார் என்று அர­சி­யல் வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து அறி­ய­மு­டி­கின்­றது.

இனி­வ­ரும் காலப்­ப­கு­தி­யில் மக்­கள் மனங்­களை வெல்­லும் வகை­யி­லான அபி­வி­ருத்­தித் திட்­டங்­களை முன்­னெ­டுப்­ப­தற்­கா­க­வும், நாடா­ளு­ மன்­றம் கலைக்­கப்­ப­டும்­வரை இதே அமைச்­ச­ர­வையைத் தக்­க­வைத்­துக்­கொள்­ளும் நோக்­கி­லுமே அவர் இவ்­வாறு ஆலோ­சனை பெற்­று­வ­ரு­கி­றார் என­வும் தெரி­ய­வ­ரு­கின்­றது.

கூட்டு அரசு உத­ய­மா­ன­தி­லி­ருந்து இது­வ­ரை­யில் அமைச்­சர்­கள் தமது அமைச்­சு­க­ளின் ஊடாக செய்­துள்ள வேலைத்­திட்­டங்­கள், இடை­யி­டையே மேற்­கொள்­ளப்­பட்ட அமைச்­ச­ரவை மாற்­றத்­தின் பின்­னர் சம்­பந்­தப்­பட்ட அமைச்­சு­கள் வினைத்­தி­ற­னு­டன் செயற்­பட்­டுள்­ள­னவா என்­பது உள்­பட மேலும் பல விட­யங்­கள் தொடர்­பி­லும் அரச தலை­வர் மைத்­திரி ஆரா­ய­வுள்­ளார்.
இதற்­காக அமைச்­சு­க­ளின் செய­லாற்று அறிக்­கை­களை ஆய்­வுக்­குட்­ப­டுத்தி அது சம்­பந்­த­மாக தனக்கு அறிக்­கை­யொன்றை வழங்­கு­மாறு தனது செய­ல­ருக்­கும் பணிப்­புரை விடுத்­துள்­ளார்.

தமிழ், சிங்­க­ளப் புத்­தாண்­டுக்கு முன்­னர் அமைச்­ச­ரவை முழு­மை­யாக மறு­சீ­ர­மைக்­கப்­ப­டும் என்று மைத்­திரி தரப்­பில் அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தா­லும், தலைமை அமைச்­சர் ரணி­லுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­தால் கூட்டு அர­சில் அங்­கம் வகிக்­கும் சுதந்­தி­ரக் கட்சி இரண்­டு­பட்­டுள்­ளது.

கூட்­ட­ர­சில் அங்­கம் வகிப்­பதா அல்­லது இல்­லையா என்­பது சம்­பந்­த­மாக சுதந்­தி­ரக் கட்­சி­யின் முடிவு இன்­றி­ரவு வெளி­யா­க­வுள்­ளது. அதன் பின்­னரே புத்­தாண்­டுக்கு முன்­னரே அமைச்­ச­ரவை மாறுமா அல்­லது புத்­தாண்­டுக்­குப் பின்­னர் அது நடை­பெ­றுமா என்று இறுதி முடி­வெ­டுக்­கப்­ப­டும்.

அமைச்­ச­ரவை மாற்­றத்­துக்கு முன்­னர் அரச தலை­வர் மைத்­தி­ரிக்­கும், தலைமை அமைச்­சர் ரணி­லுக்­கும் இடையே சிறப்­புச் சந்­திப்­பொன்று இடம்­பெ­ற­வுள்­ளது. இதன்­போது முக்­கிய திணைக்­க­ளங்­க­ளைத் தனது கட்­டுப்­பாட்­டின்­கீழ் வைத்­தி­ருக்­கும் நிலைப்­பாட்டை ரணி­லி­டம் மைத்­திரி எடுத்­து­ரைப்­பா­ரென எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

இ.தொ.கா., ஈ.பி.டி.பி. ஆகி­ய­வற்­றின் உறுப்­பி­னர்­க­ளுக்­கும் அமைச்­சுப் பத­வி­கள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன. தனி­யாட்சி அமைப்­ப­தற்­கான பெரும்­பான்மை பிர­தான கட்­சி­க­ளி­டம் இல்­லா­த­தால் கூட்­ட­ரசு தொடர்­வ­தற்­கான அறி­கு­றி­களே தென்­ப­டு­கின்­றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!