ராஜபக்சவினரைத் தண்டிக்க வேண்டும்!

மோசடியில் ஈடுபட்ட கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்ட குற்றவாளிகளுக்குத் தண்டனைகளை வழங்குவதன் மூலம் அரசாங்கம் முன்னுதாரணமாகச் செயற்பட வேண்டும் என ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று விசாரணை ஆணைக்குழுக்கள் திருத்தச் சட்ட மூலம் மீதான விவாதத்தின் போது உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

“மஹிந்த ராஜபக்ஷ, கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கிய நபர்கள் சிலர் குற்றவாளிகள் எனக் கடந்த கால ஆணைக்குழு அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.எனவே இந்த அரசாங்கம் அவர்களைத் தண்டித்து முன்னுதாரணமாக செயற்பட்டு காட்ட வேண்டும். அப்போதுதான் நாட்டு மக்களது ஆதரவு இந்த அரசாங்கத்திற்கு கிடைக்கும். அத்துடன், விசாரணை ஆணைக்குழு அறிக்கைகளை நேரடியாக நீதிமன்ற விசாரணைக்கு

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!