முரண்பாட்டைத் தீர்க்க மைத்திரி- ரணில் விரைவில் சந்திப்பு!

மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நியமனம் தொடர்பாக ஏற்பட்டுள்ள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் இடையில் விரைவில் சந்திப்பு இடம்பெற்றவுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக நியமிக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், பரிந்துரைக்கப்பட்டவரின் பெயர், அரசமைப்பு சபையால் இரண்டாவது தடவையாகவும் கடந்த 23ஆம் திகதி நிராகரிக்கப்பட்டுள்ளது. நிராகரிக்கப்பட்டமை தொடர்பிலான காரணங்களைக் கண்டறிந்து, உரியத் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கே இவ்விருவரும் சந்திக்கவுள்ளனர்.

மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவராக நியமிக்குமாறு, ஜனாதிபதியால் இதற்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட்ட பெயர், அந்தச் சந்தர்ப்பத்திலேயே நிராகரிக்கப்பட்டது. எனினும். இரண்டு வாரங்களுக்குப் பின்னர், அதே பெயரை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அர​சமைப்பு ​சபைக்கு கடந்த 23ஆம் திகதியும் அனுப்பிவைத்துள்ளார். மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கான தலைவர் வெற்றிடம் தொடர்பில், அரசமைப்பு சபை நீண்டநேரம் கலந்தாலோசித்தது. அதன் பின்னரே, ஜனாதிபதியால் அனுப்பிவைக்கப்பட்ட பெயரை அந்தச் சபை நிராகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!