20 நிறை­வேற்­றப்­பட்­டால் 20 இல் மகிந்­தவே வரு­வார்!!

20ஆவது அர­ச­மைப்பு திருத்­தம் நிறை­வேற்­றப்­பட்­டால் முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச 2020ஆம் ஆண்டு அரச தலை­வர் வேட்­பா­ள­ராகப் போட்­டியி­டு­வார். அவ்­வாறு இல்­லாது அரச தலை­வர் வேட்­பா­ள­ராக கோத்­த­பாய ராஜ­பக்­சவை மகிந்த தெரிவு செய்­வா­ரா­யின் பொது எதி­ர­ணி­யின் 52 உறுப்­பி­னர்­க­ளும் ஆத­ரவு வழங்­கு­வார்­கள்.

இவ்­வாறு தெரி­வித்­தார் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் செஹான் சேம­சிங்க
அவர் தெரி­வித்­துள்­ள­தா­வது,

கூட்­ட­ர­சின் இறுதி அத்­தி­யா­யம் 202ஆம் ஆண்­டு­டன் முடி­வ­டை­யும். நடக்­க­வுள்ள அரச தலை­வர் தேர்­தல் நாட்­டில் பெரும் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தாக அமை­யும் கூட்டு எதி­ர­ணி­யின் அரச தலை­வர் வேட்­பா­ளர் யார் என்­பதை இது­வரை கால­மும் கட்சி ரீதி­யில் உறு­தி­யான தீர்­மா­னம் மேற்­கொள்­ள­வில்லை. மக்­க­ளின் நம்­பிக்­கை­யைப் பெற்று வெற்­றிப் பெறக்­கூ­டி­ய­வ­ரையே அரச தலை­வர் வேட்­பா­ள­ராக முன்­னி­லைப்­ப­டுத்­து­வோம்.

மகிந்த ராஜ­பக்ச அரச தலை­வர் தேர்­த­லில் மீண்­டும் போட்­டி­யிட 19ஆவது அர­சி­யல் திருத்­தம் தடை­யாக உள்­ளது. ஆனால் தற்­போது 20ஆவது அர­ச­மைப்­புக்­குள் நிறை­வேற்று அதி­கா­ரத்­தைக் கொண்ட அரச தலை­வர் முறையை இரத்து செய்ய வேண்­டும் என்ற விட­யம் உள்­ள­டக்­கப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்­டால் அவர் மீண்­டும் அரச தலை­வர் தேர்­த­லில் போட்­டி­யி­ட­லாம் என்ற கருத்­தும் காணப்­ப­டு­கின்­றது . மக்­கள் விருப்­பத்­துக்கு முர­ணாக மகிந்த ராஜ­பக்ச செயற்­பட முடி­யாது.

முன்­னாள் பாது­காப்பு செய­லா­ளர் கோத்­தா­பாய ராஜ­பக்­சவை 2020ஆம் ஆண்டு அரச தலை­வர் தேர்­த­லில் போட்­டி­யி­டச் செய்ய கூட்டு எதி­ர­ணி­யின் தலை­வர் தீர்­மா­னித்­தால் கூட்டு எதி­ர­ணி­யி­னர் தமது பூரண ஆத­ரவை வழங்­கு­வார்­கள்.

ஐக்­கிய தேசிய கட்­சி­யின் அரச தலை­வர் வேட்­பா­ள­ராக தலைமை அமைச்­சர் ரணில் விக்­ர­ம­சிங்­கவை முன்­னி­லைப்­ப­டுத்த தற்­போது பெரும் முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றது.

மக்­கள் நிரா­க­ரித்த தேசிய அரசு மீண்­டும் ஆட்சி பொறுப்பை ஏற்­பது தொடர்­பில் பகல் கனவு காண்­கின்­ற­னர். அரச தலை­வ­ரா­கப் போட்­டி­யி­டும் தகைமை ஐக்­கிய தேசிய கட்­சி­யின் தலை­வ­ருக்கு கிடை­யாது. சில­வேளை போட்­டி­யிட்­டால் மக்­கள் கடந்த உள்­ளு­ராட்சி மன்ற தேர்­த­லில் புகட்­டிய அர­சி­யல் பாடத்தை மீண்­டும் புகட்­டு­வது மாத்­தி­ரம் நிச்­ச­யிக்­கப்­பட்ட உண்­மை­யா­க­வும், எதிர்ப்­பார்க்க கூடிய விட­ய­மா­க­வும் காணப்­ப­டும்.

நல்­லாட்சி என்ற நாமத்தை வைத்­துக் கொண்டு 2015
ஆம் ஆண்டு தொடக்­கம் இன்­று­வரை நாட்­டில் எவ்­வித பிரச்­சி­னை­க­ளுக்­கும் தீர்­வுக் காணப்­ப­ட­வில்லை. மக்­க­ளின் வாழ்க்கை செல­வு­களை எவ்­வி­தத்­தில் அதி­க­ரிக்க வேண்­டும் என்­பது மாத்­தி­ரமே கூட்டு அர­சின் பொரு­ளா­தார முகா­மைத்
துவ கொள்­கை­யா­க­வும், கடந்த கால அர­சைப் பழி­வாங்­கு­வது என்­ப­தைக் குறி­கோ­ளா­க­வும் கொண்டு செயற்­ப­டு­கின்­றது.கூட்டு எதி­ர­ணி­யி­னர் 2020ஆம் ஆண்டு அரச தலை­வர் தேர்­த­லில் பெரும் வெற்றி பெறு­வர். மகிந்­த­வின் தலை­மைத்­து­வத்­தின் கீழ் நாடு மீண்­டும் நிர்­வ­கிக்­கப்­பட வேண்­டும் என்­பது நாட்டு மக்­க­ளின் எதிர்­பார்ப்­பா­கக் காணப்­ப­டு­கின்­றது. மக்­க­ளின் விருப்­பத்தை முன்­னாள் அரச தலை­வர் நிறை­வேற்ற வேண்­டும்.- என்­றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!