சுதந்திரக் கட்சியின் மீதமாகவுள்ள ஆட்சியின் தலைவிதி

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சிக்­குள் ஏற்­பட்­டுள்ள குழப்­ப­நிலை, கடும் இடி­யப்­பச் சிக்­கல் நிலையை அடைந்­துள்­ளது. அர­சு­டன் இணைந்து செயற்­பட்ட சுதந்­தி­ரக் கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் தரப்­பி­லும், தற்­போது பிள­வு­கள் ஏற்­ப­டும் நிலை உரு­வா­கி­யுள்­ளது.

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்தை ஆத­ரித்து வாக்­க­ளித்த சுதந்­தி­ரக்­கட்சி அமைச்­சர்­கள் 16பேரும் தத்­த­மது அமைச்­சுப் பத­வி­க­ளைக் கைவிட்­ட­தை­ய­டுத்து இந்­தக் கடும் சிக்­கல் நிலை தோற்­றம் பெற்­றுள்­ளது.

ரணி­லுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்த சுதந்­தி­ரக் கட்­சி­யின் இந்­தப் 16பேர் தரப்­புக்­கும், அர­சில் தொடர்ந்­தும் செயற்­பட்டு வரும் சுதந்­தி­ரக்­கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் தரப்­புக்­கு­மி­டை­யே­யான உற­வில் இன்று கருத்து வேறு­பா­டு­கள் தலை தூக்­கி­யுள்­ளன.

ஐ.தே. கட்சி அர­சி­லி­ருந்து சுதந்­தி­ரக்­கட்­சி­யின் சக­ல­ரும் வௌியேறி விட­வேண்­டும் என்­பது ‘16பேர்’ தரப்­பின் நிலைப்­பாடு

அர­சில் அங்­கம் வகிக்­கும் சுதந்­தி­ரக் கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் தரப்பு ஐ. தே. கட்­சி­யின் தலை­மை­யி­லான அர­சி­லி­ருந்து வௌியே­றி­விட வேண்­டு­மென ரணி­லுக்கு எதி­ராக வாக்­க­ளித்த இந்த 16 பேர் தரப்பு கோரி­யுள்­ளது.

பொது நல­வாய நாடு­க­ளது மாநாட்­டில் கலந்­து­கொள்ள லண்­டன் சென்­றி­ருந்த அரச தலை­வர், சுதந்­தி­ரக் கட்­சிக்­குள் தலை­யெ­டுத்­துள்ள இந்­தச் சிக்­க­லைத் தீர்த்து வைக்க அங்­கி­ருந்­த­வாறே முயன்­ற­தா­க­வும் தெரி­ய­ வந்­தது.

அரச தலை­வ­ரது அழைப்­பின் பேரில் லண்­ட­னுக்­குச் சென்ற அந்த 16 அமைச்­சர்­கள் குழு­வின் மூன்று பிர­மு­கர்­கள், சுதந்­தி­ரக் கட்­சிக்­குள் தலை­தூக்­கி­யுள்ள கருத்து வேறு­பா­டு­கள் குறித்து அரச தலை­வ­ரு­டன் தனிப்­பட்ட ரீதி­யில் பேச்­சுக்­க­ளில் ஈடு­பட்­ட­தா­க­வும் தெரிய வந்­துள்­ளது.

தெரிய வந்த தக­வல்­க­ளின் படி, அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தேசிய அர­சி­லி­ருந்து வௌியே­றும் எண்­ணத்­தைக் கொண்­டி­ருக்­க­வில்லை எனக் கூறப்­ப­டு­கி­றது.

குறித்த 16 பேரது வௌியேற்­றத்­தைத் தொடர்ந்து, தற்­போது மீதம்­இருப்­போர் சுதந்­தி­ரக் கட்சி சார்­பான 10 அமைச்­சர்­களே. தேசிய அர­சி­லி­ருந்து வௌியேறி, தனித்து அர­ச­மைக்­கும் அள­வுக்கு சுதந்­தி­ரக் கட்சி பலம் வாய்ந்­த­தாக இல்லை.

கூட்டு எதி­ர­ணி­யைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தும் 53 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளது ஆத­ர­வைப் பெற்­றுக் கொண்­டா­லும் தேவைப்­ப­டும் பெரும்­பான்­மையை அந்­தத் தரப்­பி­னால் ஈட்­டிட முடி­யாது.

இத­னி­டையே தேசிய அரசை தொடர்ந்­தும் முன்­னெ­டுத்­துச் செல்­வதா? என்­பது குறித்து ஆராய்ந்து அறிக்­கை­யொன்­றைச் சமர்ப்­பிக்­கும்­படி அரச தலை­வர் விடுத்த பணிப்­பு­ரைக்­க­மைய குறித்த அந்த அறிக்­கை­யும் அரச தலை­வ­ரி­டம் கைய­ளிக்­கப்­ப­ட­வி­ருந்­தது.

அமைச்­சர் சரத் அமு­னு­கம தலை­மை­யி­லான அந்­தக் குழு­வில் மகிந்த அம­ர­வீர, துமிந்த திச­நா­யக மற்­றும் ரஞ்­சித் சியம்­ப­லா­பிட்­டிய உட்­பட்ட ஐந்து அமைச்­சர்­கள் அரச தலை­வ­ரால் நிய­மிக்­கப்­பட்­டி ­ருந்­த­னர்.

16 பேர் தரப்­புக்­கும் மீத­முள்ள சுதந்­தி­ரக் கட்­சி­யி­ன­ருக்­கும் இடையே கடும் கருத்து முரண்­பா­டு­கள்

அதே­வேளை சுதந்­தி­ரக் கட்­சி­யின் தற்­போ­தைய நிலை குறித்து நோக்­கு­கை­யில் அந்­தப் 16 பேர் குழு தொடர்­பாக கூட்டு எதி­ரணி மற்­றும் அரச தலை­வ­ரது ஆத­ர­வுத் தரப்­பி­னர் மத்­தி­யில் கருத்து முரண்­பா­டு­கள் தலை தூக்­கி­யுள்­ள­தா­கக் கொள்ள முடி­கி­றது.

விசே­ட­மாக அரச தலை­வர் தரப்­பின் அமைச்­சர்­கள் தம்­மத்­தி­யில் ஒரு­வர் மீது மற்­ற­வர் குற்­றம் குறை கூறி வரு­வது தற்­போது பிரச்­சி­னைக்கு உரி­ய­தொன்­றாக ஆகி­யுள்­ளது.

அரச தலை­வர் தரப்­புக்­கும், அந்­தப் 16 பேர் குழு­வுக்­கு­மி­டையே கடும் கருத்து வேறு­பா­டு­கள் நில­வி­வ­ரு­வ­தா­கத் தோன்­று ­கி­றது.

கடந்த அரச தலை­வர் தேர்­த­லின்­போது மைத்­தி­ரி­பால சிறி­சேன பொது வேட்­பா­ள­ராக போட்­டி­யிட முன்­வந்த வேளை­யில், அதற்கு ஆத­ர­வா­கச் செயற்­பட்டு வந்த முக்­கிய பிர­மு­கர்­கள் ஐவ­ரில் ஒரு­வர் துமிந்த திச­நா­யக ஆவார்.

நாட்டை அபி­வி­ருத்­திப் பாதை­யில் முன்­னோக்கி இட்­டுச் செல்ல வேண்­டு­மா­னால், தேசிய அர­சும் தொடர்ந்து செயற்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மென துமிந்த திச­நா­யக பகி­ரங்­க­மா­கவே கருத்து வௌியிட்­டுள்­ளார்.

ஆனால் அந்­தப் 16 பேர் குழுவோ, தேசிய அர­சி­னின்­றும் சுதந்­தி­ரக் கட்சி வில­கிக் கொள்ள வேண்­டு­மெ­னத் தெரி­வித்­துள்­ளது.

இது ஒன்­றுக்­கொன்று மாறு­பட்ட, முரண்­பட்ட நிலை என்­ப­து­டன் சுதந்­தி­ரக்­கட்­சி­யின் எதிர்­கா­லத்­துக்­குக் கடும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தும் ஒன்­றா­க­வும் அமை­யும்.

தலைமை அமைச்­ச­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­துக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்த தரப்­பி­னர், கட்சி மேற்­கொண்ட தீர்­மா­ னத்­துக்கு எதி­ரா­கச் செய ற்­பட்­ட­வர்­கள் குறித்த தக­வல்­களை விரை­வில் வௌிப்­ப­டுத்த வேண்­டு­மெ­னத் தெரி­வித்­துள்­ள­னர்.

இத்­த­கைய கருத்து மோதல்­கள் இரு தரப்­பி­னர்­கள் மத்­தி­யி­லும் வர­வர அதி­க­ரித்­துக் கொண்டே செல்­லும் நிலை நில­வு­கி­றது. கட்­சி­யின் மத்­திய செயற்­கு­ழுக்­கூட்­டம் குறித்த அறி­விப்பு இது­ வரை வௌிவ­ர­வில்லை.

இருப்­பி­னும், மத்­திய செயற்­குழு கூடி­ னா­லும்­கூட, அது­அ­ரச தலை ­வ­ரது நிலைப்­பாட்­டுக்கு எதி­ராக முடி­வொன்றை மேற்­கொள்­ளு­மெ­னக் கருத இய­லாது.

திரி­சங்கு சொர்க்க நிலை­யில்குழம்­பிப் போயுள்ள 16பேர் தரப்பு
தேசிய அர­சி­னின்­றும் வௌி யே­று­வ­தில்­லை­யென மத்­திய செயற்­குழு முடிவு செய்­யு­மா­னால் தலைமை அமைச்­ச­ருக்கு எதி­ரா­கச் செயற்­பட்ட அந்த 16 பேர்­குழு எதிர்க்­கட்சி வரி­சை­யில் அமர்­வ­தற்­குத் தயா­ராக இருக்­கின்­ற­னர்.

அத்­தோடு தேசிய அர­சி­னின்­றும் வௌியேற முடிவு செய்­யப்­பட்­டால், சுதந்­தி­ரக் கட்சி அரச அதி­கா­ரத்தை கைவிட்டு வௌியேற வேண்டி ஏற்­ப­டும். அவ்­வி­தம் நிக­ழு­ மா­னால், ஐ. தே. கட்சி சிறு­ பான்­மைக் கட்­சி­க­ளது ஆத­ர­வு­டன் நிர்­வா­கத்­தைத் தொடர இட­முண்டு.

அத்­த­கை­ய­தொரு நிலை உரு­வா­கு­மா­னால், நாடா­ளு­மன்­றத்­தின் மூன்­றி­லிரு மடங்கு பெரும்­பான்­மை­யு­டன் நிறை­வேற்ற வேண்­டிய பிரே­ர­ணை­க­ளைத் தவிர்த்து, சாதா­ரண பெரும்­பான்­மை­யு­டன் நிறை­வேற்­றக் கூடிய பிரே­ர­ணை­களை மட்­டுமே நிறை­வேற்றி, மீத­முள்ள ஒன்­றரை ஆண்­டு­கா­லம் ஐ. தே. கட்­சி­யின் தலை­மை­யி­லான அரசு செயற்­பட நேரும்.

அவ்­வி­தம் இடம் பெறு­மா­னால், அரச தலை­வர் தமது நிர்­வா­கத்தை முன்­னெ­டுக்­கப் பெரும் சிர­மத்தை எதிர்­கொள்ள இட­முண்டு. தலைமை அமைச்­ச­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ர­ணைக்கு ஆத­ர­வ­ளித்த, அரச தரப்­பில் செயற்­பட்ட அந்­தப் 16பேர் குழுவை மதிப்­போடு வர­வேற்­போம் என கூட்டு எதி­ர­ணித் தரப்்பு தெரி­வித்­துள்ள போதி­லும், அந்­தத் தரப்­பி­ன­ரு­டன் தொடர்ச்­சி­யாக அர­சி­யல் உறவு பேண கூட்டு எதி­ரணி தயா­ராக இல்லை என­வும் கருத்து வௌியி­டப்­பட்­டுள்­ளது.

பத­வி­க­ளைப் பெறும் எதிர்­பார்ப்­பில் , அர­சு­டன் தொடர்பு பேணு­வ­தா­கக் குற்­றம் சாட்­டப்­பட்­டுள்ள அந்­தப் 16பேர் தரப்­பில், குறிப்­பிட்ட சில பிர­மு­ கர்­கள், முன்­னர் கூட்டு எதி­ர­ணியை விமர்­சித்து வந்த விதம் தொடர்­பா­க­வும் அவர்­கள் கடும் வார்த்­தை­க­ளில் அவர்­களை விமர்சித்ததா­க­ வும் கூறப்­ப­டு­கி­றது.

அவ்­வி­தம் அந்­தப் 16 பேர் தரப்­பி­லுள்ள குறிப்­பிட்ட அந்­தப் பிர­மு­கர்­கள் கூட்டு எதி­ர­ணித் தரப்­புக்­கு­றித்து கேலி செய்­யும் விதத்­தில் வௌியிட்ட கருத்­துக்­கள் வௌி வந்த பத்­தி­ரிகை நறுக்­குக்­க­ளைத் தொகுத்து வைத்­தி­ருந்த கூட்டு எதி­ரணி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் தற்­போ­தும் கூட்டு எதி­ர­ணித் தரப்­பில் உள்­ள­னர்.தம்­மைத் தகாத வார்த்­தை­க­ளால் வர்­ணித்­துக் கருத்து வௌியிட்டு வந்த அந்­தப் 16பேர் தரப்­பு­டன் இணைந்து செயற்­ப­டு­வது இய­லா­தோர் காரி­யம் என்­பது கூட்டு எதி­ர­ணித் தரப்­பி­ன­ரது நிலைப்­பா­டா­கும்.

அது மட்­டு­மன்றி, குறித்த 16பேர் தரப்­பி­னர் எதிர்க்­கட்சி வரி­சை­யில் அம­ரத் தீர்­மா­னித்­த­ மைக்­கான கார­ணங்­கள் குறித்­தும், கூட்டு எதி­ர­ணித் தரப்­பி­ னர் தௌிவு படுத்­தி­யுள்­ள­னர்.

அர­சி­ய­லில் ஈடு­பட்­டுள்ள தமது மகன்­மா­ரது எதிர்­கால அர­சி­யல் இருப்­புக்கு வழி ஏற்­ப­டுத்­திக் கொடுத்­தல், எதிர்­வ­ரும் தேர்­த­லில் தமது வெற்­றியை உறு­திப்­ப­டுத்­து­வது, மக்­க­ளது அதி­ருப்­தி­யைத் திசை திருப்பி அவர்­க­ளது ஆத­ர­வைத் திரட்­டிக் கொள்­ளல், எதிர்­வ­ரும் ஒன்­றரை ஆண்­டுக் காலத்­தில் தமது அமைச்­சுப் பத­வி­க­ளைக் காப்­பாற்­றிக் கொள்­ளல், அதன் பின்­ன­ரும் அர­சி­யல் அரங்­கில் தமது அதி­கா­ரத்தை உறுதிப்ப டுத்திக்கொள்­ளல், போன்ற எதிர்­கா­லத்­திட்­டங்­க­ளு­ட­னேயே அந்­தப் 16பேர் தரப்பு செயற்­பட்டு வரு­வ­தாக கூட்டு எதி­ர­ணித்­த­ரப்­பி­னர் தெரி­விக்­கின்­ற­னர்.

பசில் ராஜ­பக்­ச­வின் போக்­குக் குறித்து கடும் அதி­ருப்தி கொண்­டுள்ள ‘16பேர்’ தரப்பு

இவற்­றின் மத்­தி­யில் பசில் ராஜ­பக்­ச­வின் ஆத­ர­வு­டன் பொது மக்­கள் முன்­ன­ணி­யில் இணைந்­துக் கொள்ள இந்­தப் 16பேர் தரப்பு விருப்­பம் கொண்­டி­ருக்­க­வில்லை எனக் கூறப்­ப­டு­கி­றது.

மகிந்த ராஜ­பக்ச தமது அதி­கா­ரத்தை இழக்க நேர்ந்­த­மைக்­கான கார­ணம், பசில் ராஜ­பக்­ச­வின் செயற்­பா­டு­களே என்­பது அந்­தப் ‘16பேர்’ தரப்­பின் கருத்­தா­கும்.

புதிய கட்­சி­யான பொது­மக்­கள் முன்­ன­ணி­யில் அந்த 16பேர் தரப்பு இணைந்து செயற்­ப­டு­வது தொடர்­பாக பசில் ராஜ­பக்­ச­வின் ஆணை­க­ளுக்கு உட்­பட்டே தாம் செயற்­பட நேரக் கூடு­மென சந்­தே­கப்­ப­டு­கின்­ற­னர்.

தற்­போது பொது மக்­கள் முன்­ன­ணியை ஆக்­கி­ர­மித்­துச் செயற்­பட்டு வரும் பசில் ராஜ­பக்ச முன்­னர் சுதந்­தி­ரக் கட்சி நிர்­வா­கத்­தில் முக்­கிய அமைச்­சுப் பொறுப்­பேற்­றுச் செயற்­பட்டு, ஏனைய அமைச்­சர்­க­ளது செயற்­பா­டு­க­ளில் அனா­வ­சிய தலை­யீட்டை மேற்­கொண்டு வந்­தி­ருந்­த­தாக கட்­சி­யின் சிரேஷ்ட உறுப்­பி­னர்­கள் இன்­றும் குற்­றம் சாட்­டு­கின்­ற­னர்.

இவற்­றி­டையே சுதந்­தி­ரக் கட்சி அர­சின் முக்­கிய பிர­மு­கர்­கள் சிலர் தேசிய அர­சி­ய­லி­ருந்து வில­கிக் கொள்­ளா­மல் எதிர்­கால அர­சி­யல் செயற்­பா­டு­க­ளைச் சுதந்­தி­ரக் கட்சி முன்­னெ­டுத்­தல் அவ­சி­ய­மா­னது எனத் தெரி­வித்து வரு­கின்­ற­னர்.

மற்­றொரு புறத்­தில் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி மற்­றும் ஐ. ம. சு. கூட்­டணி என்­ப­வற்­றின் பொதுச் செய­லா­ளர் பத­வி­களை நிரப்­பு­வது தொடர்­பாக கடும் கருத்து வேறு­பா­டு­கள் நிலவி வரு­கின்­றன.

இவ்­விரு பத­வி­கள் தொடர்­பி­லும் பூர­ண­மான மாற்­றங்­கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டு­மென கட்­சி­யின் சிரேஷ்ட உறுப்­பி­னர்­கள் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறிசே­ன­வி­டம் வேண்­டிக் கொண்­டுள்­ள­னர்.

சுதந்­தி­ரக் கட்­சிக்­குள் பிரி­வினை உரு­வா­னதே, கட்­சி­யின் இரு செய­லா­ளர்­கள் கார­ண­மா­கவே என்ற குற்­றச்­சாட்­டுக்­க­ளும் ஒரு புறம் முன்­வைக்­கப்­பட்டு வந்­துள்­ளன.

குறிப்­பாக நடந்து முடிந்த உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­த­லின்­போது, கட்சி சார்­பா­கப் போட்­டி­யி­டும் வேட்­பா­ளர்­கள் தெரி­வின்­போது கட்­சி­யின் செய­லா­ளர்­கள் நடந்து கொண்ட விதம் கட்­சி­யின் தீவிர ஆத­ர­வா­ளர்­களை முகம் சுளிக்க வைத்­தி­ருந்­தது.

ஆயி­னும் அரச தலை­வர் மைத்­தி­ரி­பா­லவோ கட்­சி­யின் செய­லர்­கள் குறித்து கடும் நம்­பிக்கை கொண்­டி­ருப்­ப­தா­க­வும் கருத முடி­கி­றது.

அந்த வகை­யில் கருத்து வேறு­பா­டு­கள் ஒரு­வர் மீது மற்­றொ­ரு­வர் சுமத்­தும் குற்­றச்­சாட்­டுக்­கள், விமர்­ச­னங்­கள், பரஸ்­பர விரோ­தங்­கள் என்­ப­வற்­றால் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் தலை­விதி நிச்­ச­ய­மற்­ற­ தொன்­றாக, உறுதித்தன்மையற்றதொன்றாக ஆகிப்­போ­யுள்­ளது என்­பது மட்­டும் நிச்­ச­ய­மா­கும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!