அரசியல் குழப்பங்கள் இருந்தாலும் இலங்கையுடன் இணைந்து செயற்பட வேண்டும்! – அமெரிக்க தளபதி

இலங்கையில் அரசியல் கொந்தளிப்பு, இனப் பிரச்சினை போன்ற தடைகள் இருந்தாலும்,இராணுவ ரீதியாக இலங்கையுடன் அமெரிக்கா தொடர்ந்து இணைந்து செயற்பட வேண்டும் என அமெரிக்காவின் இந்தோ- பசுபிக் கட்டளைத் தளபதி அட்மிரல் பிலிப் டேவிட்சன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அரசியல் குழப்பநிலை, உறுதியற்ற தன்மை மற்றும், தடைகளை ஏற்படுத்தினாலும், தொடர்ந்தும் தமக்கிடையிலான ஒத்துழைப்பு வளர்ந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்க காங்கிரஸின் செனட் சபையில் ஆயுதப்படைகள் குழுவின் விசாரணையின் போது முன்னிலையான இந்து – பசுபிக் கட்டளை பணியகத்தின் தலைவர் அட்மிரல் பிலிப் டேவிட்சன் இவ்வாறு கூறியுள்ளார்.

“இலங்கை, சீனாவிடம் இருந்து பெற்றுக்கொண்டுள்ள கடன்களுக்காக, அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு 99 ஆண்டு குத்தகைக்கு வழங்கியுள்ளது. இந்த விடயம் அனைத்துலக கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இலங்கை கடற்படையுடன் நிலையான ஈடுபாட்டை பேணுவதும், இலங்கை கடற்படையின் ஆற்றலை துரிதமாக வலுப்படுத்த, ஒத்த கருத்துடைய பங்காளர்களுடன், ஆற்றலைக் கட்டியெழுப்பும் பலதரப்பு அணுகுமுறையை உருவாக்குவதும் அவசியமானது.

அந்த வகையில், அமெரிக்கா மற்றம் இலங்கை கடற்படைகளுக்கு இடையிலான ஈடுபாடுகளை அதிகரிப்பதில், 2019ஆம் ஆண்டில் இந்தோ – பசுபிக் கட்டளைப்பீடம் கவனம் செலுத்தவுள்ளது.” என அவர் மேலும் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!