போர்க்குற்றங்களுக்கு சாட்சியாக பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளனர்! – சம்பந்தன்

இறு­திப் போரில் போர்க்­குற்­றங்­கள் இடம்­பெ­ற­வில்லை என்று மகிந்த ராஜ­பக்ச தற்­போது உறு­தி­யா­கக் கூறு­கின்­றார். இதனை நாமும் ஏற்­க­ மாட்­டோம். சர்வதேச சமூ­க­மும் அதனை ஏற்­றுக்கொள்­ளாது. பாதிக்­கப்­பட்ட மக்­கள் சாட்­சி­க­ளாக இன்­ன­மும் உள்­ளார்­கள் என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார்.

இலங்­கை­யில் போர்க்­குற்­றம் இடம்­பெ­ற­வில்லை என்று மகிந்த ராஜ­பக்ச கொழும்பு நகர மண்­ட­பத்­தில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற நிகழ்­வில் உரை­யாற்­றி­யி­ருந்­தார். இது தொடர்­பில் கருத்து வெளியிட்ட சம்­பந்­தன்,

“மகிந்த ராஜ­பக்­ச­வின் ஆட்­சிக் காலத்­தில்­தான் இறு­திப் போர் நடந்­தது. போர்க்­குற்­றங்­கள் இடம்­பெற்­றது. இந்­தப் போர்க்­குற்­றங்­கள் நடை­பெற்­றதை தற்­போ­தைய பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஒப்­புக் கொண்­டுள்­ளார்.

இந்த நிலை­யில் அவர் நாட்­டைக் காட்­டிக் கொடுத்­து­விட்­டார் என்று மகிந்த ராஜ­பக்ச தெரி­விப்­பதை, நாம் மிக­வும் வன்­மை­யா­கக் கண்­டிக்­கின்­றோம். உண்­மை­கள் வெளி­வ­ரும்­போது எதிர்ப்­புக்­க­ளும் வெளி­வ­ரத்­தான் செய்­யும். மகிந்த ராஜ­பக்ச ஒவ்­வொரு நேரத்­தி­லும் ஒவ்­வொரு வித­மான கருத்­துக்­களை வெளி­யிட்டு வரு­கின்­றார்.

தற்­போது போர்க்­குற்­றங்­கள் என்று எது­வுமே இடம்­பெ­ற­வில்லை என்று உறு­தி­யா­கக் கூறு­கின்­றார். இதனை நாமும் ஏற்­க­மாட்­டோம். சர்வதேச சமூ­க­மும் ஏற்­காது. பாதிக்­கப்­பட்ட மக்­கள் சாட்­சி­யாக உள்­ளார்­கள். எனவே விச­மத்­த­ன­மான பரப்­பு­ரை­க­ளைக் கைவிட்டு தெற்­கி­லுள்ள அர­சி­யல்­வா­தி­கள் அனை­வ­ரும் ஐ.நா. தீர்­மா­னங்­க­ளுக்கு மதிப்­ப­ளித்­துச் செயற்­பட வேண்­டும். நாட்­டின் நன்­ம­திப்­பைக் காப்­பாற்­ற­வேண்­டும் என்­றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!