மோடியிடம் கால அவகாசம் கேட்ட இம்ரான் கான்

புல்வாமா தாக்குதலில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அவகாசம் தாருங்கள் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காஷ்மீர் புல்வாமா தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்ததுடன் சம்பவத்திற்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றிருந்தது.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வந்தநிலையில், பாகிஸ்தான் அதனை பொருட்படுத்தவில்லை. இதையடுத்து இந்தியா – பாகிஸ்தான் உறவில் கடும் விரிசல் உண்டானது.

இதனால் பாகிஸ்தான் மீதான இறக்குமதி வரி 200 சதவீதமாக உயர்த்தப்பட்டது. சர்வதேச நாடுகள் பாகிஸ்தான் மீது அழுத்தம் கொடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய மத்திய அரசு செய்தது.

இந்த நிலையில் ராஜஸ்தான் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை பார்த்து அவர் ஒரு பதான் இனத்தை சேர்ந்தவராக இருந்தால், அந்த இனத்தின் பெயரை காப்பாற்றுங்கள் என்று பேசினார்.

(பதான் இனம் ஈரானை பூர்வீகமாக கொண்டது. அவர்கள் நீதி நேர்மைக்கு பெயர் பெற்றவர்கள் என்று பரவலாக பேசப்படுகிறது.)

மோடியின் இந்த பேச்சுக்கு பதிலளித்து பேசிய இம்ரான் கான், புல்வாமா தாக்குதலில் தொடர்புடையவர்கள் பாகிஸ்தானில் இருக்கிறார்கள், பாகிஸ்தானுக்கும் தாக்குதலில் தொடர்பு உண்டு என்பதற்கான ஆதாரங்களை அளித்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு இந்தியா கால அவகாசம் தர வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!