சுயரூபத்தை காண்பிக்க ஆரம்பித்துள்ளார் ஜனாதிபதி – செல்வம் அடைக்கலநாதன்

தேர்தல் காலம் நெருங்குவதால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னுடைய சுயரூபத்தை காண்பிக்க ஆரம்பித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இலங்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்காவின் உதவியுடன் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியிருந்தது. தற்போது அதனை வாபஸ் பெறுவது குறித்து ஆராய்ந்து வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளமை குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டை வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

கடந்த தேர்தலின் போதும் அதற்கு பின்னரும் குழந்தை போல செயற்பட்ட அவர் தற்போது ஐக்கிய நாடுகள் பேரவையில் வழங்கிய இணை அனுசணையிலிருந்து வாபஸ் பெறுவது குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளமை ஏற்றுக் கொள்ளத்தக்க விடயமல்ல.

ஆகவே ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் வகிக்கின்ற ஏனைய சர்வதேச நாடுகளுடன் சந்திப்பினை மேற்கொள்வதற்கு அனுமதி கோரயுள்ளோம். அவ்வாறு சந்திப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கப் பெற்றால் இது குறித்து வலியுறுத்துவோம் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!