2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனு தள்ளுபடி!

2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க கூடாது என்று தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார். மேலும் அதை ஏற்க மறுப்பவர்களுக்கு அரசு வேலை, மானியம் மற்றும் குடியுரிமை, ஓட்டுரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தார்.

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘‘அரசியல் அமைப்பை கொண்டு இயங்கும் நீதிமன்றம், 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்று எப்படி சொல்ல முடியும்?’’ என்று கேட்ட நீதிபதிகள் அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!