ரணி­லு­டன் இணைந்து மாற்­றங்­களைச் செய்­வேன்- மைத்திரி!!

அமைச்­ச­ர­வையை நிய­மிக்­கும்­போ­தும், அமைச்­ச­ர­வை­யில் நிறு­வன ரீதி­யாக மாற்­றம் மேற்­கொள்­ளும்­போ­தும், சகல நட­வ­டிக்­கை­க­ளை­யும் தலைமை அமைச் ச­ரு­டன் கலந்­து­ரை­யாடி, அவ­ரு­டன் இணைந்து முன்­னெ­டுப்­பேன் என்று அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­தார்.

பிரதி அமைச்­சர்­கள், இரா­ஜாங்க அமைச்­சர்­கள் மறு­சீ­ர­மைப்பு மேற்­கொள்­ளப்­பட்டு பத­வி­யேற்பு நேற்று இடம்­பெற்­றது. இந்த நிகழ்­வில் உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

தலைமை அமைச்­ச­ரும் நானும் உங்­க­ளுக்­குத் தேவை­யான சகல உத­வி­க­ளை­யும் ஒத்­து­ழைப்­பை­யும் வழங்­கு­வோம் என்­ப­தை­யும் பத­வி­யேற்­கும் உங்­க­ளுக்கு இங்கு நான் தெரி­விக்க விரும்­பு­கின்­றேன்.

அமைச்­ச­ரவை நிய­ம­னம், இரா­ஜாங்க மற்­றும் பிரதி அமைச்­சர்­கள் நிய­ம­னம் என்­பவை தொடர்­பில் கடந்த பல தசாப்த கால­மா­கவே எந்­த­வொரு அரச தலை­வ­ருக்­கும் நூறு சத­வீ­த­மாக அனை­வ­ரது பாராட்­டை­யும் பெற­மு­டி­யாத நிலையே காணப்­ப­டு­கின்­றது.

உரிய அர­சி­தழ் விட­யப்­ப­ரப்­பில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள செயற்­பா­டு­கள் மட்­டு­மன்றி எந்­த­வொரு இரா­ஜாங்க அமைச்­ச­ரும் பிரதி அமைச்­ச­ரும் தமது விட­யப் பரப்­புக்கு மேல­தி­க­மா­க­வும் பல சேவை­களை நிறை­வேற்ற முடி­யும். தத்­த­மது ஆற்­றல், திறமை, அறிவு என்­ப­வற்­றிற்கு ஏற்ப அனை­வ­ரும் தமது கட­மை­களை சிறந்­த­வாறு நிறை­வேற்ற முடி­யும்.

தமது துறை­யின் எல்­லை­கள் தொடர்­பாக சிந்­திப்­பதை விடுத்து, தமது விட­யப் பரப்­புக்கு உட்­பட்­டும் அதற்கு அப்­பா­லும் எவ்­வாறு கட­மை­களை நிறை­வேற்­ற­லாம் என்­பது தொடர்­பில் கவ­னம் செலுத்த வேண்­டி­யது அவ­சி­ய­மா­கும்.

தற்­போது இந்த ஆண்­டி­லும் 4 மாதங்­கள் கடந்து விட்­டன. தாம­த­ம­டைந்­துள்ள செயற்­பா­டு­க­ளைப் போலவே நிறை­வேற்ற வேண்­டிய ஏனைய பணி­க­ளை­யும் அபி­வி­ருத்தி திட்­டத்­தி­னுள் உள்­வாங்கி குறித்­த­வொரு இலக்­கு­டன் வினைத்­தி­ற­னான முறை­யில் செயற்­ப­டு­வ­தற்­கான ஆற்­றல், தேவை மற்­றும் புரிந்­து­ணர்வு ஆகி­யன அனை­வ­ருக்­கும் காணப்­ப­டு­கின்­றது.

எனவே நாம் அரசு என்ற வகை­யில் எமது நாட்­டுக்­கா­க­வும் மக்­க­ளுக்­கா­க­வும் தற்­போ­துள்ள பொரு­ளா­தார நிலை­மை­கள் மற்­றும் அர­சி­யல் நில­மை­க­ளைக் கருத்­தில் கொண்டு இந்­தப் பணி­களை நிறை­வேற்­று­வ­தற்­காக விரை­வா­க­வும் வினைத்­தி­ற­னு­ட­னும் ஒன்­றி­ணைய வேண்­டி­யது அவ­சி­ய­மா­கும்.

அர­சுக்கு எதி­ராக தற்­போது எழுந்­துள்ள விமர்­ச­னங்­க­ளுக்கு மத்­தி­யில் விஞ்­ஞான ரீதி­யில் அமைச்­ச­ரவை வகைப்­ப­டுத்­தப்­ப­டும் எனக் கூறப்­பட்ட போதி­லும் தற்­போது அவ்­வாறு இடம்­பெ­ற­வில்­லையே என்று அதிக விமர்­ச­னங்­கள் காணப்­ப­டு­கின்­றன. நான் அந்­தக் குற்­றச்­சாட்­டினை ஏற்­றுக்­கொள்ள மாட்­டேன்.

இந்த அமைச்­ச­ர­வை­யினை புதி­தா­கத் திட்­ட­மி­டு­கை­யில் தலைமை அமைச்­ச­ரு­டன் நானும் கலந்­து­ரை­யாடி பல்­வேறு தவ­று­களை நிவர்த்தி செய்­தோம். அதே­போல் அமைச்­சுக்­க­ளின் கீழ் செயற்­ப­டும் நிறு­வ­னங்­கள் மற்­றும் அவற்­றின் பணி­கள் தொடர்­பான அர­சி­தழை வெளி­யி­டும்­போ­தும் இந்த விஞ்­ஞான ரீதி­யான பகுப்பு தெளி­வாக கருத்­திற் கொள்­ளப்­ப­டும் என்று நான் தெரி­விக்க விரும்­பு­கின்­றேன்.

அது தொடர்­பில் எவ­ரும் கவலை கொள்­ளத் தேவை­யில்லை. ஏனெ­னில் நாட்டு மக்­கள் அனை­வ­ருமே நாம் தெரி­வித்த விட­யங்­களை சரி­வர நிறை­வேற்­று­வோமா என்று எதிர்­பார்த்­துக் கொண்­டி­ருக்­கின்­ற­னர் என்­பதை நான் அறி­வேன். இதன் கார­ண­மா­கவே பல்­வேறு விமர்­ச­னங்­க­ளுக்கு மத்­தி­யில் செயற்­பட்டு வந்த பல அமைச்­சுக்­க­ளில் தற்­போது மாற்­றங்­கள் செய்­யப்­பட்­டுள்­ளன.

அடுத்­த­தாக நிறு­வன ரீதி­யில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய மாற்­றங்­களை தலைமை அமைச்­ச­ரும் நானும் தெளி­வா­கக் கலந்­து­ரை­யாடி, விஞ்­ஞான ரீதி­யில் நிறு­வ­னங்­களை வகைப்­ப­டுத்தி உரிய அர­சி­தழை வெளி­யிட எதிர்­பார்க்­கின்­றோம். அனை­வ­ருக்­கும் இந்த விட­யத்­தில் பொறுப்பு காணப்­ப­டு­கின்­றது.

எமது செயற்­பா­டு­கள் எவ்­வாறு நிறை­வேற்­றப்­ப­டும் என மக்­கள் எம்மை அவ­தா­னித்­துக் கொண்­டி­ருக்­கின்­றார்­கள். எதிர்க் கட்­சி­யி­னர் எத்­த­கைய குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்­திய போதி­லும் நாம் அனை­வ­ரும் புரிந்­து­ணர்­வு­டன் செயற்­பட்டு, எமது அரசை வெற்­றி­க­ர­மாக கொண்டு செல்­ல­வேண்­டும்.

அதன் மூல­மாக எதிர்­பார்க்­கப்­ப­டும் அபி­வி­ருத்தி இலக்­கு­க­ளு­டன் சிறந்த பொரு­ளா­தா­ரத்­தை­யும் சிறந்த சமூக சூழ­லை­யும் ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய ஜன­நா­யக அர­சி­யல் சமூ­கத்­தில் நாம் அனை­வ­ரும் ஒன்­றி­ணைந்து நட்­பு­டன், ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் உதவி, ஒத்­தா­சை­களை வழங்கி உண்­மை­யாக செயற்­ப­டு­வோம் – என்­றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!