“கோப்குழு அறிக்கையை புறக்கணிக்கவே ஜனாதிபதியூடாக பிரதமர் முயற்சித்தார்”

மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் குறித்த கோப் குழுவின் அறிக்கையினை புறக்கணிப்பதற்காகவே ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவினூடாக பாராளுமன்றத்தை கலைக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்தார் என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் குற்றஞ்சுத்தியுள்ளார்.

மேலும் அர்ஜூன் மகேந்திரனை பாதுகாப்பதற்கு முன்னெடுக்கப்பட்டு வந்த முயற்சிகள் குறித்தும் மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பேணிவந்த தொடர்புகள் குறித்தும் தகுந்த ஆதாரங்கள் காணப்படுகின்றன.

எனவே பிணைமுறி விவகாரத்தின் பின்னணியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பேணிவரும் தொடர்புகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வேண்டுக்கோள் விடுத்தார்.

‘வியத்மக’ அமைப்பின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!