தமிழ்த்­தே­சி­யத்­தின் மீட்­சிக்கு தமிழ்க் கட்­சி­க­ளி­டையே ஒற்­றுமை அவ­சி­யம்

பெரும்­பான்­மை­யின அர­சி­யல் கட்­சி­கள் தமி­ழர் தாயகப் பகு­தி­க­ளில் காலூன்­று­வ­தில் அதிக அக்­கறை காட்டி வரு­வதை அவ­தா­னிக்க முடி­கின்­றது.

நடந்து முடிந்த உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் இந்­தக் கட்­சி­கள் கடந்த காலங்­களை விட அதிக ஆச­னங்­க­ளைப் பெற்­றுக் கொண்­ட­மையை ஓர் அபாய அறி­விப்­பா­கவே கருத வேண்­டி­யுள்­ளது.

முஸ்லிம் மக்­க­ளது தனிப்­பெ­ரும் கட்­சி­யாக உரு­வான சிறி­லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸ்

சிறு­பான்மை மக்­க­ளின் ஒரு பிரி­வி­ன­ரான முஸ்­லிம் மக்­கள், நீண்ட கால­மா­கவே பெரும்­பான்­மை­யி­னக் கட்­சி­க­ளு­டன் உற­வைப்­பேணி வரு­கின்­ற­னர். இந்த மக்­க­ளுக்­கென மறைந்த தலை­வர் அஷ்­ரப்­பி­னால் சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ரஸ் என்ற பெய­ரில் புதிய கட்­சி­யொன்று ஆரம்­பிக்­கப்­பட்­டது.

ஆரம்­பத்­தில் கிழக்­கில் உள்ள முஸ்­லிம் மக்­க­ளின் அமோக ஆத­ரவு இந்­தக்­கட்­சிக்­குக் கிட்­டி­யி­ருந்­தது. பின்­னர் நாட்­டின் ஏனைய பகு­தி­க­ளில் வாழ்ந்த முஸ்­லிம் மக்­க­ளின் ஆத­ர­வும் இந்­தக் கட்­சிக்­குக் கிடைத்­தது.

பேரி­ன­வா­தி­கள் ஆரம்­பத்­தில் இதை எதிர்க்­கவே செய்­த­னர். முஸ்­லிம்­க­ளின் மத்­தி­யில் அவர்­க­ளுக்­கெ­னத் தனி­யா­ன­தொரு கட்சி உரு­வா­வதை அவர்­கள் விரும்­ப­ வில்லை. இத­னால் தமது கட்­சி­க­ளுக்­குப் பாதிப்பு ஏற்­பட்­டு­ வி­டும் என்­பதே அதற்­கான கார­ண­மா­கும்.

சில முஸ்­லிம் தரப்­பி­லி­ருந்­தும் இதற்கு எதி।ர்ப்­புக் கிளம்­பி­யது. மத்­தி­யில் தாம் வகித்து வரு­கின்ற பத­வி­க­ளுக்கு ஆபத்து வந்து விடு­வோ­மென்ற அச்­சமே இவர்­க­ளது அந்த எதிர்ப்­புக்­கான கார­ண­மா­கும். ஆனால், அஷ்­ரப் இவற்­றை­யெல்­லாம் பொருட்­ப­டுத்­தாது கட்­சி­யைக் கட்­டி­யெ­ழுப்­பி­னார். முஸ்­லிம் மக்­க­ளின் மிகப்­பெ­ரிய அர­சி­யல் சக்­தி­யாக அதை உரு­வாக்­கி­னார்.

அஷ்­ரப்­பின் மறை­வுக்­குப் பின்­னர் முஸ்­லிம் காங்­கி­ரஸ் பல பிரி­வு­க­ளா­கப் பிள­வ­டைந்­தது. இத­னால் முஸ்­லிம் மக்­க­ளும் தமது ஒற்­று­மையை இழக்க நேரிட்­டது. இத­னால் பெரும் தேர்­தல்­கள் இடம் பெறும்­போது பெரும் பான்­மை­யி­னக் கட்­சி­க­ளு­ட­னும், சிறு­பான்­மை­யி­னக் கட்­சி­க­ளு­ட­னும் கூட்­டுச்­சேர்ந்து அந்­தக் கட்­சி­க­ளின் சின்­னத்­தி்ல் போட்­டி­யிட வேண்­டிய நிர்ப்­பந்­தத்தை சிறி­லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸ் எதிர்­கொள்ள வேண்டி நேரிட்­டது.

நடை­பெற்று முடிந்த உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் வடக்­குக் கிழக்­கில் எந்­த­வொரு தமிழ்க்­கட்­சி­க­ளுக்­கும் அறு­திப் பெரும்­பான்மை கிடைக்­க­வில்லை. இத­னால் கொள்­கை­யில் வேறு­ பட்ட கட்­சி­கள் இணைந்து செய­லாற்ற வேண்­டிய துர­திர்ஷ்­ட­மான நிலை உரு­வா­னது. வடக்­கில் ஈ.பி.டி.பி.யின் ஆத­ர­வு­டன் ஆட்­சி­ய­மைக்க வேண்­டிய அவ­ல­மான நிலைக்கு கூட்­ட­மைப்பு தள்­ளப்­பட்­டது.

ஈ.பி.டி.பி.யுடன் உறவு பேணும் கூட்­ட­மைப்­பின் போக்­கால் அதி­ருப்தி அடைந்­துள்ள கூட்­ட­மைப்­பின் தீவிர ஆத­ர­வா­ளர்­கள்

ஈ.பி.டி.பி எப்­போ­துமே பேரி­ன­வா­தக் கட்­சி­க­ளு­டன் இணைந்து செய­லாற்­று­வ­தையே தனது கொள்­கை­யா­கக் கொண்­டது. புலி­கள் வீழ்ச்­சி­ ய­டைந்­த­போது அதி­க­மாக மகிழ்ச்­சி­ய­டைந்­த­வர்­கள் இந்­தக் கட்­சி­யி­னர்­தான்.

இந்த நிலை­யில் கூட்­ட­மைப்பு இவர்­க­ளு­டன் உற­வு­க­ளைப்­பேணி வரு­வதை அந்­தக் கட்­சி­யைச் சேர்ந்­த­வர்­க­ளா­லேயே ஜீர­ணிக்க முடி­ய­ வில்லை. ஈபி­டி­பி­யு­டன் இணைய முடி­யு­மா­னால் எம்­மு­டன்­இ­ணை­வ­தற்கு கூட்­ட­ மைப்­புக்கு என்ன தயக்­க­மெ­னக் கேள்வி எழுப்­பிய கருணா, கிழக்­கில் பிர­தே­ச­சபை யொன்­றில் கூட்­ட­மைப்­புக்கு ஆத­ரவு வழங்கி ஆட்­சி­ய­மைக்க உத­வி­யமை குறிப்­பி­ட த்­தக்க அம்­ச­மா­கும்.

வவு­னி।யா வடக்­கில் மகிந்­த­வின் கட்­சி­யும், கர­வெட்­டி­யில் சுதந்­தி­ரக்­கட்­சி­யும் ஆட்­சியை அமைப்­ப­தற்­கான வாய்ப்­புக் காணப்­பட்­ட­தால் , அதை முறி­ய­டிக்­கும் வகை­யில் கூட்­ட­மைப்பு அங்கு ஆட்­சி­ய­மைப்­ப­தற்கு தமிழ் தேசிய மக்­கள் முன்­னணி ஆத­ர­வ­ளிக்­கு­மென செய்­தி­கள் அடிபட்­டன. ஆனால் அதற்­கான தேவை எழ­வில்லை.

வடக்­கில் பெரும்­பான்­மை­யின மக்­க­ளைக் குடி­யேற்­று­கின்ற முயற்­சி­கள் அர­சின் ஆத­ர­வு­டன் இடம்­பெற்று வரு­கின்­றன. இதன் கார­ண­மாக எதிர்­கா­லத்­தில் இடம்­பெற விருக்­கும் தேர்­தல்­க­ளில் தமி­ழர்­க­ளின் பிர­தி­நி­தித்­து­வத்­துக்­குப் பெரும் பாதிப்பு ஏற்­ப­டப்­போ­வதை இப்­போதே உணர முடி­கி­றது.

பத­வி­க­ளுக்­கா­க­வும் சலு­கை­க­ளுக்­கா­க­வும் பெரும்­பான்­மை­யி­னக் கட்­சி­க­ளி­ட­ம் விலை­போ­கும் தமி­ழர்­கள்

பத­வி­க­ளுக்­கா­க­வும் சலு­கை­க­ளுக்­கா­க­வும் சில தமி­ழர்­கள் பெரும்­பான்­மை­யி­னக் கட்­சி­க­ளுக்கு முண்டு கொடுக்கப் பின்­நிற்­கப்­போ­வ­தில்லை. பேரி­ன­வா­தக் கட்­சி­கள் தமது நோக்­கம் நிறை­வே­றி­ய­வு­டன் சிறு­ பான்மை மக்­க­ளைத் திரும்­பி­ யும் பார்க்க மாட்டா என்­பதை கடந்த கால வர­லா­று­கள் எடுத்­துக் கூறு­கின்­றன.

தமிழ்த் தலை­வர்­கள் தமக்­குள் முரண்­ப­டு­வதை விடுத்து ஏற்­ப­டப் போகின்ற அபா­யத்தை எதிர்­கொள்­வ­தற்­குத் தம்­மைத் தயார்ப்படுத்­திக்கொள்ள வேண் டும். தமக்­குள் முரண்­ப­டு­வ­தால் அந்­நிய சக்­தி­கள் பல­ம­டைந்து விடு­மென்­ப­தை­யும் அவர்­கள் புரிந்து கொள்ள வேண்­டும்.

தமிழ்க் கட்­சி­கள் ஒற்­று­மை­யா­கச் செயற்­ப­டு­வ­தன் மூலமே பேரி­ன­வா­தம் எழுச்­சி­யு­று­வ­தை­யும், தமிழ்த் தேசி­யம் வீழ்ச்­சி­யு­று­வ­தை­யும் தடுக்க முடி­யும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!