“வடகிழக்கில் மக்கள் திறந்தவெளி சிறையில் ; இராணுவத்தை ஏன் பலப்படுத்த வேண்டும்”

நாட்டில் அமைதியும் சமாதானமும் நிலவுவதாக கூறிக்கொண்டு பாதுகாப்பு படைக்கு ஏன் 393 பில்லியன் ஒதுக்கப்பட்டது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கேள்வி எழுப்பினார்.

வடக்கு கிழக்கில் திறந்த வெளி சிறைச்சாலையில் மக்களின் சொந்த நிலைகளை விடுவிக்க முடியாத, அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த முடியாத நிலையில் இராணுவத்தை ஏன் பலப்படுத்த வேண்டும். சமாதான காலத்தில் ஏன் பாதுகாப்புக்கு இவ்வளவு தொகை ஒதுக்கப்பட்ட வேண்டும். ஆகவே இது யுத்த வரவு-செலவு திட்டமாகும்.

பாராளுமன்றத்தில் 2019 ஆம் ஆண்டுக்கான முதல் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!