அட்மிரல் கரன்னகொட உள்ளிட்டோருக்கு எதிராக கொலை வழக்கு

சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட மற்றும் ஏனைய கடற்படை அதிகாரிகள் மீது, கொலை செய்தமை, கொலைக்கு உடந்தையாக இருந்தமை, கொலை செய்ய சூழ்ச்சி செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்கத்தின் சார்பில், கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று முன்னிலையான மூத்த அரச சட்டவாளர் ஜனக பண்டா இதனைத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கிலேயே சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி உள்ளிட்டவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளது.

அத்துடன் இந்த வழக்கில் முக்கிய சந்தேக நபர்களான சம்பத் முனசிங்க உள்ளிட்ட 6 கடற்படை அதிகாரிகளையும் மார்ச் 19ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்கவும் நீதிவான் கட்டளையிட்டுள்ளார்.

அதேவேளை, தம்மைக் கைது செய்வதை தடுக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் அட்மிரல் வசந்த கரன்னதாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனு மீது இன்று விசாரணை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!