வகுப்பறையில் கையடக்க தொலைபேசி பாவனைக்கு தடை

ஒன்ராறியோ பாடசாலைகளில் வகுப்பு நேரங்களில் மாணவர்களின் கையடக்க தொலைபேசி பாவனையை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இந்நடைமுறையானது எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், இது தொடர்பான முறையான அறிவித்தல் வெகுவிரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் லிசா தொம்சன் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் தொலைபேசியில் அன்றி கல்வி நடவடிக்கைகளிலேயே கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும் என்றும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், தொலைபேசி பாவனையை தடை செய்வதன் மூலம் மாணவர்களை கற்றல் செயற்பாடுகளின் திறன் விருத்தியை நோக்கி திசை திருப்ப முடியும் எனவும் கல்வி அமைச்சர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!