மக்களாணையுடன் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் – பசில்

மக்களாணையினை மதிக்கின்ற அரசாங்கம் தோற்றம் பெற்றதன் பின்னரே புதிய அரசியலமைப்பு ஒன்று நிச்சயம் எனத் தெரிவித்த பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ, அவ்வாறு உருவாக்கப்படும் அரசியலமைப்பு அனைத்து தரப்பினரையும் திருப்திபடுத்தும் வகையில் அமையும் என்றார்.

பொதுஜன பெரமுனவின் தலைமைக் காரியாலயத்தில இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தேசிய அரசாங்கம் புதிய அரசியலமைப்பு தொடர்பில் கடந்த நான்கு வருட காலமாக முன்னெடுத்த முயற்சிகள் அனைத்தும் பயனற்றதாகி விட்டது. தற்போது அதிகார பகிர்வு தொடர்பில் பல கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றது. இவ்விடயத்தில் பல முரண்பாடுகளும் காணப்படுகின்றது. இப்பிரச்சினைகளுக்கு தற்போது தீர்வு காண்பது சாத்தியமற்ற விடயமாகும் எனவும் இதன்போத தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!