யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் காணிப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண உரிய அதிகாரிகள் முன்வர வேண்டும் – றிப்கான் பதியுதீன்

நாட்டில் இடம் பெற்ற உள்நாட்டு போரினால் தமிழ்,முஸ்ஸீம் சிங்களவர்கள் என்று பாகுபடு இல்லாமல் அனைவருமே பாதிக்கப்பட்டவர்கள்.இந்த மக்களின் காணிகள் தொடர்பில் தீர்க்கப்படாத பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றது.

அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண உரிய அதிகாரிகள் முன் வர வேண்டும் என கைத்தொழில் வர்த்தக அமைச்சரின் பிரத்தியேக செயலாளரும்,முன்னால் வடமாகாண சபை உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் தெரிவித்தார்.

உள் நாட்டலுவல்கள் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் ஏற்பாட்டில் ‘ஆவணங்கள் பதிவு செய்தல் தொடர்பான விரைவான சேவை’ இன்று சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் காணிகள் தொடர்பில் சுமார் 30 வருடங்களுக்கு முன்னால் அவதானிக்கின்ற போது பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றது.

அதந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பாதிக்கப்பட்டவர் கிராம அலுவலகரிடம் சென்றால் ஒரு சில கிராம அலுவலகர்கள் தனக்காகவே மக்கள் வருகின்றார்கள் என நிலைத்து அதற்கான பதிலை கூறுகின்றனர்.

ஒரு கிராமத்திற்கு கிராம அலுவலகரை நியமிப்பது அக் கிராமத்தில் உள்ள பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்காகவே. நான் சில தினங்களுக்கு முன்னர் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட தீவுப்பிட்டி என்ற கிராமத்திற்குச் சென்றிருந்தேன். குறித்த கிராமத்தில் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக 40 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

அந்த மக்களுக்கு இது வரை காணி வழங்கப்படவில்லை.எனினும் குறித்த கிராமத்தில் உள்ள 7 குடும்பங்களுக்கு மட்டும் வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளது.

எனினும் அக்கிராம மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். குறித்த கிராம மக்களுக்கு அரச காணிகள் இருக்கின்ற போதும்,அக்காணிகளை மக்களுக்கு வழங்குவதற்கு அங்குள்ள கிராம அலுவலகர்கள் முதல் அதிகாரிகள் வரை தடையாக இருக்கின்றார்கள்.

அடிமட்டத்தில் இருக்கின்ற மக்களை நாங்கள் புத்திசாளியாக மாற்ற வேண்டும்.அந்த மக்களின் எண்ணங்களை நாங்கள் சரியான முறையில் செயல்படுத்த வேண்டும்.அந்த மக்கள் எதனையும் அறியாதவர்களாக உள்ளனர்.அந்த மக்கள் எதனையும் கொண்டு செல்ல வரவில்லை.தாங்கள் இருப்பதற்கு ஒரு இடத்தை மாத்திரமே கேட்டுள்ளனர்.

அதற்கு நாம் இயன்ற உதவிகளை மேற்கொள்ள வேண்டும்.மக்கள் காணி பதிவுகள் தொடர்பில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்கள் தங்களினால் இயலாத நிலையிலே அதிகாரிகளை நாடிச் செல்லுகின்றனர்.எனவே வாய்ப்பேச்சி இல்லாமல் நடை முறையில் செயல் படுத்த வேண்டும். மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள குறித்த செயல் திட்டத்திக்கு அனைத்து அதிகாரிகளும் பூரண ஒத்துழைப்பை வழங்கி மக்களின் காணி தொடர்பான பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் பிரதேச செயலாளர்கள்,மாவட்ட காணி அதிகாரிகள்,சட்டத்தரணிகள்,திணைக்கள அதிகாரிகள் மக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!