அல்-நூர் மசூதி திறக்கப்பட்டது: கண்ணீருடன் மக்கள் பிரார்த்தனை

துப்பாக்கிச்சூட்டு தாக்குதல் இடம்பெற்று ஒருவாரத்தின் பின்னர் நியூஸிலாந்து அல்-நூர் மசூதி மீண்டும் இன்று சனிக்கிழமை திறக்கப்படுகிறது.

நியூஸிலாந்து கிறிஸ்ட்சர்ச் அல்-நூர் மசூதி கடந்த 15 ஆம் திகதி வழமைக்கு மாறான சம்பவத்தால் அமைதியிழந்திருந்தது. வெள்ளிக்கிழமை விசேட தொழுகைக்காக நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்த நிலையில் அவுஸ்திரேலியா நபர் ஒருவர் வெறித்தனமாக மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 50 பேர் உயிரை இழந்ததோடு பலர் படுகாயமடைந்தனர்.

பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அல்-நூர் மசூதி மீண்டும் இன்று திறக்கப்படுகிறது.

“தாக்குதலுக்கு பின்னரான முதல் பிரார்த்தனைகளுக்காக நாம் இன்று ஒன்றுகூடியுள்ளோம் பலரும் கண்ணீரோடு இன்று காலையில் மசூதியில் ஒன்று கூடியுள்ளனர்” என முஹம்மத் இசீஸ் என்பவர் தெரிவித்துள்ளார் .

மசூதி திறக்கப்படுவதற்கு முன்பாக உயிரிழந்தோருக்கு தமது அன்பை வெளிப்படுத்தும் விதமாக நியூஸிலாந்தை சேர்ந்த 3000 மக்கள் மசூதிக்கு முன்பாக அணிவகுப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!