கிணற்றில் வீழ்ந்த குழந்தை 36 மணிநேரத்தின் பின்னர் உயிருடன் மீட்பு!

ஹரியானாவில் ஆழ்துளைக் கிணற்றிற்குள் வீழ்ந்து இருநாட்களாக தவித்த குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

ஹரியானா மாநிலத்தில் 60 அடி ஆழ்துளைக் கிணற்றிற்குள் விழுந்த ஒன்றரை வயது குழந்தையை 36 மணிநேர போராட்டத்துக்கு பின்னர் நேற்று வெள்ளிக்கிழமை மீட்பு படையினர் மீட்டுள்ளனர்.

ஹரியானா மாநிலத்தின் ஹிசார் மாவட்டத்தில் உள்ள பல்சமன்ட் கிராமத்தில் பராமரிப்பின்றிக் காணப்பட்ட ஆழ்துளை குழாய்க்குள் நேற்று முன்தினம் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை தவறி விழுந்தது.

குறித்த பகுதியில் தீயணைப்பு மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஆழ்துளைக் கிணற்றிற்கு அருகாமையில் புதிதாகக் குழிவெட்டி குறித்த குழந்தையை காப்பாற்றுவதற்காக இருநாட்களாக நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையிலேயே இன்று குறித்த குழந்தை மீட்கப்பட்டுள்ளதுடன், குறித்த குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹரியானா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!