இந்தியாவில் வாக்களிக்கும் தகுதியை இழந்துள்ள 21 மில்லியன் வாக்காளர்கள்

இந்திய பொதுத் தேர்தல் அடுத்த (ஏப்ரல்) மாதம் 11ஆம் திகதி ஆரம்பித்து 7 கட்டங்களாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்தியாவில் 21 மில்லியன் பெண் வாக்காளர்கள், இம்முறை இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் தகுதியை இழந்துள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பதிவு செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலில் 451 மில்லியன் பெண் வாக்காளர்கள் உள்ளீர்க்கப்படவேண்டிய நிலையில், 430 மில்லியன் பெண் வாக்காளர்களே சட்டரீதியாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இலங்கையின் சனத்தொகைக்கு இணையான இந்திய பெண் வாக்காளர்கள் இம்முறை தேர்தலில் வாக்களிக்கும் தகுதியை இழந்துள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!