வடக்கில் முதல்முறையாக பௌத்த மாநாடு ஆரம்பம்!

வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனின் வழிகாட்டலில் வடமாகாண பௌத்த மாநாடு வவுனியா ஸ்ரீ போதி தட்சிணாராம விகாரையில் இன்று காலை 8.30 மணியளவில் ஆரம்பமானது. சமய வழிபாடுகளுடன் ஆரம்பமான இந்நிகழ்வில், அதனைத் தொடர்ந்து பல்வேறு கலாசார நிகழ்வுகளுடனான மத அனுஷ்டானங்கள் இடம்பெற்று வருகின்றது.

வடக்கு கிழக்கு மாகாணங்களின் பிரதம சங்கைக்குரிய நாயக்கர், வவுனியா மாவட்ட தலைவர் பூஜ்ஜிய சியம்பலா கஸ்வௌ விமலசார தேரர், புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா மற்றும் வட. மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோரின் தலைமையில் இந்த பௌத்த மாநாடு இடம்பெற்று வருகின்றது.

வரலாற்றில் முதன்முறையாக நடத்தப்படும் இந்த பௌத்த மாநாடு, வடமாகாண ஆளுநர் அலுவலகத்தின் கீழான புத்தசாசன அமைச்சு, பிரதேச அரசியல் தலைவர்கள், முப்படையினர் மற்றும் அரச உத்தியோகத்தர்களின் பூரண பங்களிப்புடன் இடம்பெற்று வருகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!