வெளிநாட்டு முதலீடுகள் இடம்பெறாமைக்கு காரணம் அரசாங்கம் – மஹிந்தானந்த

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அரசாங்கம் எந்த சலுகையையும் வழங்குவதில்லை. அவர்களை ஊக்குவிக்கும் எந்த வேலைத்திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை. அதனால்தான் முதலீட்டாளர்கள் வருவதில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே சபையில் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

இந்த அரசாங்கத்தின் பிரதான இயக்குநராக மலிக் சமரவிக்ரமவே செயற்படுகின்றார். அவரது அமைச்சின் கீழே சர்வதேச வர்த்தகம் இருக்கின்றது. எனினும் அவருக்கு இருக்கும் வெளிவேலைகள் காரணமாக சர்வதேச வரத்தக அமைச்சின் வேலைத்திட்டங்களை மேற்கொள்ள முடியாது.

அதனால் பொருத்தமான ஒருவருக்கு இந்த அமைச்சை கையளித்து ஒதுங்கிக்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!