அரச ஊழியர்களின் சம்பளத்தை கேள்விக்குட்படுத்துவதை ஏற்க முடியாது – நிமல் ஸ்ரீபால டி சில்வா

Helth Minister Nimalsiripala de Silva.Pic Kavindra PERERA
வரவு – செலவு திட்ட நிதி ஒதுக்கீடு தோற்கடிக்கப்பட்டமையை காரணம் காட்டி அரச அதிகாரிகளுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்க முடியாது என அமைச்சர் வஜிர அபேவர்தண தெரிவித்துள்ள கருத்து நியாமற்றது என சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் ஸ்ரீபால டி சில்வா தெரிவித்தார்.

அத்துடன் நிதி ஒதுக்கீடு தோற்கடிக்கப்பட்டால் அந்த துறைக்கான மாற்று ஏற்பாட்டை மேற்கொள்ள வேண்டியதும் அரசாங்கத்தினதும் குறித்த அமைச்சினதும் பொறுப்பாகும்.

எனினும் அதிகாரிகளுக்கு சம்பளம் வழங்க முடியாது எனக் கூறுவது அரசாங்கத்தின் இயலாமையையும், ஐக்கிய தேசிய கட்சிக்குள் காணப்படும் ஒற்றுமையின்மையையும் வெளிப்படுத்துகின்றது எனவும் சுட்டிக்காட்டினார்.

சுதந்திர கட்சி காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!